இன்னொருமுறை இதை எழுதமாட்டேன்....
இன்னுமொருமுறை இப்படி முன்னுரை எழுத நேர்ந்துவிடக்கூடாதென்ற சிந்தனையோடே இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.பிறகென்ன? முடிவெடுத்து வலைப்பதிவொன்றையும் ஆரம்பித்து, முன்னுரையோடு இன்னும் மூன்று பதிவுகளையும் போட்டுவிட்டுக் காணாமல்போய் வாழ்வின் முக்கியமான திருப்பங்களுக்குள் தொலைந்திருந்துவிட்டுத் திடீரென எதிர்பாராத தருணங்களில் என்னையே நான் கண்டெடுக்கும் அற்புதம் வாய்க்கையில் அந்நினைவுகளை அப்படியே சேமித்துக்கொள்ள எழுத எண்ணும்போது ஏற்கனவே தொழில்நுட்பத் தகராறுகள் செய்துகொண்டிருந்த வலைப்பக்கம் முழுதுமாய்க் கண்ணை மூடிவிட்டதால் இப்போது மீண்டும் புதிய பதிவுக்குப் புதிய முன்னுரை எழுதும்போது எனக்கு வந்திருக்கும் பயம் இயல்பானதுதானே?
எழுதும் நேரம் இல்லாதபோதும் தமிழ்மணத்தைப் பார்வையிடும் நேரம் அவ்வப்போது கிடைத்துக்கொண்டிருந்ததே மகிழ்ச்சியாக இருந்தது. நிறையப் பதிவுகள் நிறையச் சிந்திக்க வைத்தன. "man may come; man may go; but the brook goes on for ever" மாதிரி அதன்பாட்டுக்குப் போய்க்கொண்டேயிருக்கிறது "தமிழ்மணம்". இன்னும் சொல்லப்போனால் புனிதங்கள் என்றெல்லாம் மாயச்சாயம் பூசிக்கொள்ளாமல் சண்டைகளோடும், சமாதானங்களோடும் வாழ்வின் எதார்த்தங்களைக் கொண்டிருக்கிறது இது. பல புதிய பதிவர்களைப் பார்க்கிறேன். ஆர்வத்தோடு பல தடங்களில் பயணங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. நினைத்துப் பார்த்தால் வலைப்பதிவு என்பது எவ்வளவு வசதியென்ற ஆச்சரியம் வருகிறது. குடத்தில் ஊற்றிவைத்த நீரில் சோப்புக்கரைக்கப்பட்டால் மேலெழும்பும் நுரைக்குமிழ்கள் போலவே மனம் அசைக்கப்படும்போது ஏற்படும் அதிர்வுகளும் சொற்ப ஆயுள் கொண்டவை. அவற்றை உடனுக்குடன் பதிந்துவைக்கும் வசதியல்லவா இவை! ஊறப்போட்டு உருவம்கொடுக்குமளவு வளர்வதற்கான பயிற்சிப்பட்டறையும் இவை!
எனக்குள் எழுந்தடங்கும் நுரைக்குமிழ்களுக்கும் நீண்ட ஆயுள்தேடும் முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டதுதான் என் முந்தைய "நிறங்கள்" வலைப்பதிவு. செல்வராஜ் போன்ற நண்பர்கள் அதற்குத் தொடர்ந்து உயிர்ப்பைக் கொடுக்கப் போராடியும் அது "தினமலரில்" தன் பெயர் வெளிவந்த கையோடு ஆயுளை முடித்துக் கொண்டது:)) ஆனாலும் தொடர்ந்தெழும்பும் நுரைக்குமிழ்களை என்ன செய்வது? எனவே இப்போது மீண்டும் "நிறங்கள்" வேறு வடிவத்தில். இதற்கிடையில் மின்னஞ்சலில் என்னைத் தட்டியெழுப்பி மீண்டும் எழுத இழுத்த நண்பர்களின் அன்பை நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன் இந்நேரத்தில்.
10 Comments:
அடடே, வாங்க வாங்க... இந்த முறை நிலைச்சு சதம் போடுங்க செல்வநாயகி :-)
அன்புடன்
அருணா.
(±ÉìÌû ±Øó¾ ±ñ½í¸¨Ç!¾ÉìÌû ¦¾Ã¢óÐ ¦º¡øÖõ ¦ºøÅ¡..!)
²ü¸É§Å ±Ø¾¢Â Á¼ø¸¨Ç §ºÁ¢òÐ ¨Åò¾¢Õ츢ȣ÷¸Ç¡ ¦ºøÅ¡?
þó¾ ¿£ñ¼¿¡û þ¨¼¦ÅǢ¢ø ¦ºøÅ¿¡Â¸¢ ŨÄôÀ¾¢× ¨Åò¾¢Õó¾Ðܼ ¦¾Ã¢Â¡Áø
þÕó¾¢Õ츢§Èý :(
¾¢ÕõÀ¢Åó¾ þó¾ º¢Ä ¿¡ð¸Ç¢ø ¦ºøÅ¡¨Åì ¸¡½Å¢ø¨Ä§Â ±ýÚ Áɾ¢ø ´Õ ¿¨É×!
þÉ¢ ±ó¾Å¢¾ ¾¼í¸Ùõ þøÄ¡Áø ¦¾¡¼ÃðÎõ
¯í¸Ç¢ý ¦Áý¨ÁÂ¡É ±ØòÐì¸û.
«ýÒ Á£É¡.
(எனக்குள் எழுந்த எண்ணங்களை!தனக்குள் தெரிந்து சொல்லும் செல்வா..!)
ஏற்கனவே எழுதிய மடல்களை சேமித்து வைத்திருக்கிறீர்களா செல்வா?
இந்த நீண்டநாள் இடைவெளியில் செல்வநாயகி வலைப்பதிவு வைத்திருந்ததுகூட தெரியாமல்
இருந்திருக்கிறேன் :(
திரும்பிவந்த இந்த சில நாட்களில் செல்வாவைக் காணவில்லையே என்று மனதில் ஒரு நனைவு!
இனி எந்தவித தடங்களும் இல்லாமல் தொடரட்டும்
உங்களின் மென்மையான எழுத்துக்கள்.
அன்பு மீனா.
******************
மீனா, உங்கள் பின்னூட்டத்தை யூனிகோடில் இட்டிருக்கிறேன். நன்றி உங்கள் வரவேற்பிற்கு!
//// இந்த முறை நிலைச்சு சதம் போடுங்க செல்வநாயகி /////
அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன், பார்க்கலாம். நன்றி அருணா.
Welcome Selvanayaki. Keep writing.
- Suresh Kannan
Meendum Vazthukkal !!! Ethirparppudan ..
Jagadheeswaran.R
பெயரைப் பார்த்தவுடன் என்னுடன் டிப்ளமோ பயின்ற என் ராக்கி சகோதரி(செல்வநாயகி)தான் வலைப்பூ ஆரம்பித்து விட்டாளோ என்று பார்த்தேன்! ஆனால் நீங்கள் வேறு யாரோ!
சுரேஷ் கண்ணன், ஜெகதீஸ்வரன், நாமக்கல் சிபி நன்றி.
அன்பின் செல்வநாயகி,
மரத்தடியிலிருந்து காணாமன்போனபின், வலைப்பூக்களுக்கிடையே மீண்டும் நீங்கள் வந்திருப்பது மகிழ்ச்சி. மேலும் எழுதுங்கள்.
அன்புடன்
ஸ்ரீமங்கை
முடிவெடுத்து வலைப்பதிவொன்றையும் ஆரம்பித்து, முன்னுரையோடு இன்னும் மூன்று பதிவுகளையும் போட்டுவிட்டுக் காணாமல்போய் வாழ்வின் முக்கியமான திருப்பங்களுக்குள் தொலைந்திருந்துவிட்டுத் திடீரென எதிர்பாராத தருணங்களில் என்னையே நான் கண்டெடுக்கும் அற்புதம் வாய்க்கையில் அந்நினைவுகளை அப்படியே சேமித்துக்கொள்ள எழுத எண்ணும்போது ஏற்கனவே தொழில்நுட்பத் தகராறுகள் செய்துகொண்டிருந்த வலைப்பக்கம் முழுதுமாய்க் கண்ணை மூடிவிட்டதால் இப்போது மீண்டும் புதிய பதிவுக்குப் புதிய முன்னுரை எழுதும்போது எனக்கு வந்திருக்கும் பயம் இயல்பானதுதானே?//
அம்மாடியோவ்! நீளம் அதிகம்தான் ஆனாலும் அதிலும் ஒரு அழகைத் தேக்கிக் கொண்டு வந்து விடுகிறீர்களே. நல்ல தமிழ் உங்களிடம் தவழ்கிறது, வாசிக்க இயல்பாய்...
தருமி,
இவ்வளவு நீளமாகவா ஒரு வாக்கியத்தை அமைப்பது:)) இப்போதுதான் இதை நானே கவனிக்கிறேன் நீங்கள் எடுத்துப் போட்ட பிறகு. பிடித்திருக்கிறது என்று வேறு சொல்லிவிட்டீர்கள். என்றாலும் நீளத்தைக் குறைக்க முயற்சிக்கவேண்டுமெனத் தோன்றுகிறது:)) நன்றி உங்களுக்கு.
Post a Comment
<< Home