நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, August 03, 2006

ஊகங்கள் கற்பனைகள் உண்மைகள்

சமீபத்தில் துளசிதளத்தில் இடப்பட்டிருந்த "அம்மா என்றால் அன்பு" பதிவும், பின்னூட்டங்களும், அதில் பத்மாவும், மதியும் சுட்டிக்காட்டிய குறிப்புகளும், அந்தக் குறிப்புகளின் ஊடாக பிறகு எனக்கு நானே எழுப்பிக்கொண்ட கேள்விகளும், அதைத்
தொடர்ந்து இணையத்தில் தேடி எடுத்த செய்திகளும்தான் என்னுடைய இந்தப்பதிவுக்கு அடிப்படை. ஒரு கைக்குழந்தையின் தாய் இரவில் தொடர்ந்தழுகின்ற தன் குழந்தையைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் தோற்றுப்போய் அது எரிச்சலாக மாறிச்
செய்ய ஒன்றும் தெரியாத இயலாமையில் அல்லது ஆத்திரத்தில் குழந்தையைத் தூக்கிக் கட்டிலின்மீது வீசியதில் அது இறந்துபோய்விடுகிறது. பிறகு தாய் அழுகிறாள். இதுதான் பதிவு. பதிவிலேயே post natal depression பற்றியும் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. நம்முடைய ஜனரஞ்சக இதழ்களிலும் இப்போது மனச்சோர்வு, மனஅழுத்தங்கள் பற்றிய கட்டுரைகளும், அது குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என்று ஒவ்வொரு பிரிவினரிலும் வருவதற்கான வாய்ப்புகள் எப்படி உருவாகின்றன என்பதெல்லாமும் எழுதப்படுகின்றன. ஆனாலும் பெண்களைத் தாக்கும் இக்குறிப்பிட்ட பேறுகால மன அழுத்தம்
பற்றி இன்னும் பெரிதான விழிப்புணர்வு ஏற்படவில்லையென்றே தோன்றுகிறது. இந்நிலையில் மேலைநாடுகளில் தெரிந்திருக்கிற, பேசப்படுகிற இப்பிரச்சினை என்னவென்றோ அது எவ்வளவுதூரம் பாதிக்கிறதென்றோ அது நம் மக்களிடையேயும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதாவென்றோ அதுகுறித்துச் சொல்லப்படும் பதிவின் பின்னூட்டங்களில் யோசித்தால் அதுதான் நமக்குப் பயனுடையதாக இருக்கமுடியும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? இது மேலைநாடென்பதால்தான் நடக்கிறதென்கிறோம். மேலைநாட்டுத் தாய்களுக்குக் குழந்தைகள் மீது அன்பில்லை என்கிறோம். ஒரு தமிழச்சியால் இப்படிச் செய்யமுடியாதென்கிறோம். நம் ஊரில்தான் வறுமை, அங்கு அப்படியில்லை, எனவே கொழுப்புக்குத் தண்டிக்கச் சொல்லிச் சாமியைக் கூப்பிடுகிறோம். மனிதாபிமானம்
இல்லாமைக்குத்தான் post natal depression என்று பெயரென சொந்த வரையறை கூடக் கொடுக்கிறோம். இவையெல்லாம் நம் ஊகங்கள், இப்படித்தான் இருந்திருக்கவேண்டுமென்ற கற்பனைகள். ஆனால் post natal depression பற்றிய உண்மைகளுக்கும் இவற்றிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது உலக அளவிலான பிரச்சினை என்கின்றன மருத்துவ
ஆராய்ச்சிகள். மாசாசூட்ஸ் ஜென்ரல் ஹாஸ்பிடலின் உளவியல் மருத்துவத்துறையின் இணை இயக்குனரும், பல்வேறு மருத்துவக் கழகங்களின் உறுப்பினருமான டாக்டர் ரூடா நோநாக்ஸ் இது குறித்தான தன் ஆய்வு நூலில் மருத்துவ வார்த்தைகளில் post partum depression என்று அழைக்கப்படக்கூடிய பிரசிவித்த தாய்மார்களைத் தாக்கும் நோய் பற்றி
இவ்வாறு கூறுகிறார். அது அவரின் வார்த்தைகளில் அப்படியே:

"During the postpartum period(பிரசவத்தின் பின்னான காலம்) upto 85% of women experience some type of mood disturbance. For most women, symptoms are transient and relatively mild(ie, postpartum blues); however few women experience a more disabling and persistent form of mood disturbance (eg, postpartum depression, postpartum psychosis).

1. Postpartum depression occurs in 10-15% of women in the general population.

2. Women at highest risk are those with a personal history of depression, previous episode postpartum depression, or

depression during pregnanacy, or depression during pregnanacy.

3. typically postpartum depression develops insidiously over the first 3 postpartum months.

4. Signs and symptoms are clinically indistinguishable from major depression that occurs in women at other times. Symptoms may include depressed mood, tearfulness, insomnia, fatighu, appetite disturbance, suicidal thoughts and recurrent thoughts of death.

5. Anxiety is prominent, including worries or obsessions about the infant`s health and well being.

6. The mother may have ambivalent or negative feelings toward the infant. She may also have thoughts about harming the infant. "

இவ்வளவும், இதற்கு மேலும் இருக்கிறது இதுகுறித்து. இதில் 4 ஆவதாகச் சொல்லப்பட்டிருக்கிற அறிகுறி நிலையிலேயே இது கண்டுணரப்பட்டுத் தேவையானவை செய்யப்பட்டுவிடுகின்றன பெரும்பாலும் இங்கெல்லாம். இவை கண்டுணரப்படாது விடப்படுகிற, சரியாக்கத் தேவையான மருத்துவம் மற்றும் வீட்டுச் சூழ்நிலைகளில் இல்லாத பெண்கள்தான் இதன் 6 ஆவதான சிந்தனைவரை போகிறார்கள். அதுவும் இதில் கவனிக்க வேண்டியது, சிந்தனைவரையே இழுத்துச் செல்கிறது இந்த postpartum depression. அந்தமாதிரி செய்துவிடுகிறவரை போகிறவர்களை இன்னும் தீவிரவமாகப்
பாதிக்கப்பட்ட நிலையான postpartum psychosis வகையைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள். மருத்துவனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை செய்யப்படவேண்டிய தீவிரமான நிலை இது. மிதமான சோர்வுநிலையில் இருக்கும் பெண்கள் வெளிப்படையாக இதைச் சொல்லாமலும், அது கவனிக்கப்படாமலும் இருக்கும்பட்சத்தில்கூட அவர்களிடம் வளரும் குழந்தைகளில் இது சில பாதிப்புக்களை சிறிய அளவிலேனும் ஏற்படுத்துமென்கிறார்கள். சரியான வயதில் பேசக்கற்றுக்கொள்ளாமை, மற்ற குழந்தைகளுடன் சுலபமாகக் கலந்து விளையாட முடியாமை போன்றவை அவை.

இதற்கான காரணங்களாக பலவகைகளைக் குறிப்பிடுகிறார் ரூடா நோநாக்ஸ். பிரசவித்தின்பின் உடனடியாக மாற்றமடைகிற ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள், (hormonal factors) குடும்பப் பிரச்சினைகள் (psychosocial factors) , மூதாதையருக்கு
இருந்து அதனால் வருவது என்று பல காரணங்கள் இருக்கின்றன. இதில் இரண்டாவதான psychosocial factors பற்றி அவர் வரிகளை அப்படியே கவனிக்க வேண்டியது முக்கியமானது.

"Women who report inadequate social supports, marital discord or dissatisfaction are more likely to experience postpartum depression"

என்கிறார். இதற்குள் இருக்கும் பொருள்களை நம் சமூகத்தோடு பொருத்திப்பார்த்தால் தெரியும், நம் ஊரிலும் இது இருக்கிறதா இல்லையா என்பது. கண்டுணரப்படவில்லை என்பதே உண்மை. இங்கு வந்து, பிரசவித்த பின் தொடர்ந்த முதல்மாத follow up முழுதிலும் என்னிடம் "சோர்வு ஏற்படுகிறதா? குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுகிறாயா?
பாலூட்டுகிறாயா? தூங்குகிறாயா? எத்தனை மணிநேரம் தூங்குகிறாய்? மன அழுத்தம் ஏதுமில்லையே?" என்றே கேட்டுக்கொண்டிருந்த என் மருத்துவர் மற்றும், அவர் குழுவினரிடம் எல்லாக்கேள்விகளுக்கும் மகிழ்ச்சியாகப் பதில் சொல்லிவிட்டுக் கடைசிக் கேள்விக்கு மட்டும் "குழந்தை பிறந்தால் மனமகிழ்ச்சிதானே வரும்? மனஅழுத்தம் பற்றியெல்லாம் கேட்கிறார்களே! என்ன ஊரடா இது!" என்று எரிச்சல்பட்டுக்கொண்டே ஒரு வார்த்தையில் பதில் சொல்லியிருக்கிறேன் நானும். பிறகு நாட்கள் செல்லச்செல்ல குழந்தை படுத்திய நாட்களில் காரணமின்றிக் கணவரிடம் எரிந்து விழுந்த என் அனுபவத்தையும், தோழியர் சிலரின் பிரச்சினைகளையும், இதோ இப்போது இரண்டுநாட்களாக இது குறித்த பல்வேறு ஆய்வுகளடங்கிய கட்டுரைகளைப் படித்துத் தெரிந்துகொள்வதையும் வைத்துக் குறைந்தபட்சம் ஒரு முழுமையான புரிதல் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இது ஏற்படுகிற சமயத்தில் நினைத்துப் பார்க்கிறேன் என் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களையும்.

நான் சிறுவயதாயிருந்தபோது குழந்தை பிறந்து தாய் வீட்டில் இருந்த அக்கா ஒருவர் "எப்பப் பார்த்தாலும் அழுதுக்கிட்டே இருக்குது இது. கொண்டுபோய்ப் புங்கங்கரையில எறிஞ்சிட்டு வந்தரலாம்னு தோணுது" என்று அவரின் அம்மாவிடம் சொன்னதை அங்கு விளையாடிக்கொண்டே கேட்டிருக்கிறேன். தோட்டத்துக்குப் போகும் அந்த அக்காவின் அம்மாவைப் பார்த்து "சாயந்தரம் சீக்கிரமே வந்துரு, இதவெச்சுக்கிட்டு என்னால சீராழிய முடியாது" என்று சண்டைபோட்டதையும் பார்த்திருக்கிறேன். வெய்யிலில் வேலை செய்துவிட்டு வந்த என் அத்தை ஒருவர் வீட்டிற்குள் வந்ததும் படுத்துக்கொண்டு
கெக்கெபிக்கே வெனச் சிரித்துக்கொண்டிருந்த தன் 3 மாதக் குழந்தையை எடுக்கப்போனபோது என் அம்மாச்சி "இப்பத்தான் குளிச்சு வெச்சிருக்கேன், நீயும் குளிச்சிட்டு வந்து அப்பறம் எடு, வெய்யில்ல போனதுக்கு வேத்துக்கிடப்பே" என்று சொன்னதற்கு "என் புள்ளைய எப்ப எடுக்கனும், எப்ப எடுக்கக்கூடாதுன்னு எனக்குத் தெரியும் யாருஞ்சொல்ல
வேண்டியதில்லை" என்று எரிந்து விழுந்ததைப் பார்த்திருக்கிறேன். மனநலம் குன்றியிருந்த தாத்தா ஒருவரின் மகள் எனக்குச் சித்தி முறை. அவர் தன் பிரசவத்தின் பின் திடீரென மனநலம் குன்றிப்போய் மிகத் தீவிரமாகவும் பாதிக்கப்பட்டுக் கடைசியில் குழந்தை இறந்து, பின் சிலமாதங்களில் அவரும் தற்கொலை செய்து இறந்த அந்த வீடின் துக்கத்தைப் பார்த்திருக்கிறேன்.

அந்த அக்காவின், அத்தையின், சித்தியின் பிரச்சினைகள் என்ன? அக்காவுக்கு அவரின் முன்கோபம் காரணம் என்றும், அத்தைக்கு அவர் ஒரே பிள்ளையாக வளர்ந்ததன் திமிர் என்றும் சித்திக்கு விதி என்றும்தான் அப்போது எனக்குச் சொல்லபட்டது. ஆனால் இப்போது ரூடா நோவாக்ஸ் சொல்லுகின்ற உண்மைகள் அத்தனையும் அவர்களோடும்
பொருந்தியிருந்தது புரிகிறது. இங்கே postpartum depression மட்டுமல்ல, கருவுற்ற காலத்திலும் ஏற்படும் உளவியல் மாறுபாடுகளையும் கவனிக்கச் சொல்கிறார்கள். அப்போதும் இக்காரணங்கள் கருச்சிதைவு, குறைப்பிரசவத்தில் கொண்டுபோய்விடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் பிரச்சினை வராமல் தடுக்க ஒரு தாய்க்குக் கூறப்படும் அறிவுரைகள் இவை;

1. Try to get as much rest as you can. Try to nap when the baby naps.

2.Ask for help with household chores and nighttime feedings. Ask your husband or partner to bring the baby to you so you can breastfeed. If you can, have a friend, family member, or professional support person help you in the home for part of the day.

3. Stop putting pressure on yourself to do everything. Do as much as you can and leave the rest.

4.Talk to your husband or partner, family and friends about how you are feeling..

5. Do not spend a lot of time alone. Get dressed and leave the house. Run an errand or take a short walk.

6. Spend time alone with your husband or partner.

7. Talk with other moms so you can learn from their experiences.

8.Don`t make any major life changes during pregnancy. Major changes can cause unneeded stress. Sometime big changes cannot be avoided. When that happens, try to arrange support and help in your new situation ahead of time.

தாயாகும் ஒரு பெண்ணில் ஏற்படும் மாற்றங்களுக்கு மருத்துவம் கூறும் இவ்வளவு உண்மைகள் அடிப்படையாக இருக்கின்றன."தாய் என்றால் பொறுமையின் சிகரமாக இருக்கவேண்டியவள், அப்படியில்லாதுபோனால் அவள் நல்ல தாய் இல்லை" என்பது
போன்ற பெண் மீது சுமத்தப்படும் தியாக பிம்பங்களுக்குள் மூழ்கிக்கொண்டும், கரு கலைந்துபோனால் ஏழரைச்சனி என்று எள்தீபம் போட்டுக்கொண்டும், அவள் நடத்தையில் வித்தியாசம் தெரிந்தால் உடனே பேயோட்டிக்கொண்டும் இருக்கிற நம்
அளவுகோல்களை வைத்துக்கொண்டு ஒரு மேலைநாட்டுப் பெண்ணை அளக்க முயற்சிக்கிறோம். எப்போதும் கற்பிக்கப்பட்டவைகளையே பேசிக்கொண்டிருக்கும் நாம் கற்கும் ஆவலில் பேசுவதில்லையோ!

20 Comments:

At 4:47 PM, August 03, 2006, Blogger SnackDragon said...

நல்லதொரு பதிவு.நன்றி

 
At 5:13 PM, August 03, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதிவு செல்வநாயகி.. இது ஒரு புதிய செய்தி.. இதுவரை இது போன்ற டிப்ரெஷனைப் பற்றி நான் படித்ததில்லை.. ஆனால், நீங்கள் சொல்லும் அறிகுறிகளைப் பார்த்திருக்கிறேன்.. துளசி தளத்தின் சுட்டியையும் சேர்த்திருக்கலாமே.

 
At 5:29 PM, August 03, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி கார்த்திக்.

பொன்ஸ்,

என்னுடைய வலைப்பதிவுத் தொழில்நுட்ப ஞானம் எவ்வளவு பெரியதுன்னு தெரியாது உங்களுக்கு:)) சுட்டியை அவர் பெயரிலேயே சேர்த்துக்கொடுக்க ஆசை, ஆனால் தெரியாது. அவசரம் வேறு. பிறகு முயற்சிக்கிறேன். நன்றி.

 
At 5:32 PM, August 03, 2006, Blogger செல்வநாயகி said...

பதிவில் சொல்ல விட்டுப்போனது

தகவல்களுக்கு நன்றி:

womenshealth.gov
emedicine.com

 
At 5:36 PM, August 03, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

//சுட்டியை அவர் பெயரிலேயே சேர்த்துக்கொடுக்க ஆசை, ஆனால் தெரியாது. //

சுலபம் தான்..:)..
இப்போதைக்குப் புதிதாகப் படிப்பவர்களுக்கு வசதியாக இந்தப் பின்னூட்டத்தில் இணைத்துவிடுகிறேன்..

துளசி தளம் - அம்மா என்றால் அன்பு

நானே தேடிப் படித்துவிட்டேன்.. முதலிலேயே படித்திருந்தால், அந்தத் தாயாருக்கு என்ன பிரச்சனையோ என்று கேட்டிருப்பேன்.. இங்கு வருவதற்கு முன் வெளிநாட்டுத் தாய்மாரைப் பற்றிய என் எண்ணமும் கிட்டத்தட்ட அந்தப் பின்னூட்டங்களில் சொல்லப்பட்டிருப்பது போல் தான் இருந்தது.. இங்கே வந்து பார்த்தபின் வெகுவாக மாறி இருப்பது உண்மை..

 
At 6:28 PM, August 03, 2006, Blogger பத்மா அர்விந்த் said...

Selva
I am planning to write more on this aspect when I get a little break.

 
At 7:06 PM, August 03, 2006, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

அவசியமான பதிவுக்கு நன்றி செல்வநாயகி.

நீங்க சொன்னது போல இது பற்றிப் பேசப்படுவதேயில்லை. தாய் என்பவரும் ஒரு மனிதப்பிறவிதான், எல்லாருக்குமுள்ள குறை நிறைகள் தேவைகள் இயல்புகள் அவருக்கும் இருக்கும் என்பது ஏனோ மிகவும் வசதியாக மறந்து போகிறது/ மறக்கடிக்கப்படுகிறது. இங்கேயாவது இதைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் ஊரில் இப்படியிருப்பதே பதிவில் குறிப்பிட்ட மாதிரி, பெருங்குற்றம். பிள்ளையைப் பிடிக்காது என்று ஒரு தாய் சொன்னால் எதனால் அப்படிச் சொல்லத்தோன்றுகிறது என்பதைத் தேடியறியாமல் அந்தத் தாய்க்கு உதவி தேவைப்படக்கூடும் என்பதை உணராமல் அவர் மீது குற்றம் சுமத்துவது sadly எங்கள் சமூகத்துக்கு வழக்கமாகி விட்டது.

சமீபத்தில் தெரிய வந்தது, பலகாலம் பிள்ளை இல்லாமலிருந்து அதற்காகக் கவலைப்பட்ட தம்பதியருக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன. மனைவியின் தாயும், உதவியாளர்களுமிருந்தனர். குழந்தைகளுக்கு 7/8 மாதமிருக்கையில் அத்தாய் தற்கொலை செய்து கொண்டார். post natal depression வழமையான durationக்கும் மேலாக இருந்ததே காரணம் என்று சொல்லப்பட்டது.

அவவை அழுத்தும் விதமாக குழந்தைப் பராமரிப்பு இருந்திருக்க வாய்ப்பில்லையாயினும், மகப்பேறு என்கிற ஒரு மிகப்பெரும் நிகழ்வூடாக அவர் போய் வந்திருக்கிறார் என்பதையும் அது (நான் கேள்விப்பட்டவரையில்) ஒரு பெண்ணை மாற்றும்/தாக்கும் (good or otherwise) வல்லமையுள்ளது என்பதையும் இதைப் பற்றிப் பேசுபவர்கள் மறந்துபோன மாதிரித்தான் அறியக்கிடக்கிறது. வசதியிருப்பதும், உதவிக்கு ஆளிருப்பதும் ஓரளவுக்கு இப்பிரச்சனையைத் தவிர்க்க உதவக்கூடுமேயொழிய முழுத் தீர்வாகாது.

 
At 11:54 PM, August 03, 2006, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

பொதுவாக இன்றைய உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு பெயர் Inferiority Complex, அந்த Depression, இந்த Depression என்று எதற்கெடுத்தாலும் ஒரு பெயர் வைத்து எதோ ஒரு வியாதி இருப்பது போன்று காட்டி விடுகிறார்கள். பல சமயம் இது போன்ற விஷயங்களுக்கு பெயரிட்டு எடுத்துச் சொல்வதன் மூலம் இதன் தாக்கத்தை அதிகப் படுத்தி விடுகிறார்களோ என்று எனக்கு தோன்றுகிறது.

இது போன்ற விஷயங்களுக்கு நம் நாட்டில் common senseஐ தான் அதிகம் உபயோகித்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அம்மா வீட்டில் சில காலம் தங்க வைத்திருப்பது அதன் மூலம் குழந்தை வளர்ப்பு பற்றியும் நல்ல ஒரு knowlege transfer அதோடு குழந்தையின் அம்மாவுக்கும் நல்ல ஒரு ஒத்தாசை மற்றும் ரெஸ்ட்.

ஆனால் இன்றைய உலகில் எத்தனை குடும்பங்களில் இதெல்லாம் சரியாக நடைபெறுகிறது ஆகவே இது போன்ற common sense மூலம் தீர்த்து விடக் கூடிய விஷயங்களுக்கு கூட நாம் நோய் பெயர் வைத்து ஒரு மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு விட்டோம்.

வேகமான இன்றைய உலகின் சாபக்கேடு இதுதான் என்று நினைக்கிறேன்.

குழந்தை பிறந்த சில நாட்களிலேயே வேலைக்கு செல்வது, குழந்தையையும் கவனிக்க முடியாமல் வேலை பிரஷர் என்று collapse ஆகி விடுவது எல்லாம் எதற்காக மனிதன் எதற்கு பின்னால் இன்று ஓடிக் கொண்டிருக்கிறான் என்றே புரியவில்லை.

பதிவின் கருப் பொருளில் இருந்து சற்று விலகி இருந்தால் மன்னிக்கவும். பதிவைப் படித்தவுடன் மனதில் தோன்றியதை அப்படியே அடித்து விட்டேன்.

 
At 12:03 AM, August 04, 2006, Blogger செல்வநாயகி said...

பத்மா,
எழுதுங்கள், இன்னும் இதில் விவரங்கள் கிடைக்கும் படிப்பவர்க்கு உங்களிடமிருந்து.

ஷ்ரேயா,
நீங்கள் சொல்லியிருப்பது வரிக்குவரி சரி, இதிலெல்லாம் நாம் இன்னும் நிறையதூரம் போக வேண்டியிருக்க்கிறது.

இருவர்க்கும், பொன்ஸ்சுக்கும் (இணைப்புக் கொடுத்து உதவியமைக்கு) நன்றி.

 
At 12:24 AM, August 04, 2006, Blogger இளங்கோ-டிசே said...

அவசியமான பதிவு செல்வநாயகி.
.....
இந்த மனவழுத்த நோய்(?) பற்றி ஒரு கட்டுரை வாசித்தபோது, குழந்தை பிறந்தபின்னும், குழந்தையைப் போல இரண்டுமடங்கு ஒழுங்கான பராமரிப்பு பெற்ற தாயுக்கு அவசியம் என்று எங்கையோ வாசித்தாய் நினைவு.

 
At 12:41 AM, August 04, 2006, Blogger செல்வநாயகி said...

குமரன் எண்ணம்,

///பதிவின் கருப் பொருளில் இருந்து சற்று விலகி இருந்தால் மன்னிக்கவும்///
அதெல்லாம் ஒன்றுமில்லை, நோய் குறித்த உங்கள் புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அவ்வளவுதானே.

உலகம் இயந்திரமயமாகிக் கிடக்கிறது, இந்த ஓட்டத்தில் உடல், மனப் பிரச்சினைகள் வருகிறது என்கிறீர்கள். அதில் எனக்கொன்றும் பெரிதாக மாற்றுக்கருத்து இல்லை. இது இருபாலருக்கும் பொதுவானவையே. தங்கள் அவசர அட்டவணைகளிலும், விழிப்புணர்வுள்ளவர்கள் இரண்டுபேருமே வேலைக்குப் போனாலும், வேண்டிய அக்கறை எடுத்துத் திட்டம்போட்டு நடைப்பயிற்சி , உணவுக்கட்டுப்பாடு என்றெல்லாம் இருக்கிறார்கள் என்பது நீங்களும் அறிந்ததுதானே.

ஆனால் நான் இங்கு பேசியிருப்பது நீங்கள் சொன்னதுபோல் ஏதோ பயமூட்டுவதற்கு பெயரிட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட நோய் அல்ல. பெண்கள் குழந்தை பிறந்தவுடன் வேலைக்குப் போகிறதால்தான் இதெல்லாம் என்பது சரியல்ல. அதற்குத்தான் தாய்மைப்பேறுக்கென்று இவ்வளவுகாலம் பெண்களுக்குக் கண்டிப்பாக சம்பளத்துடன்கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்பது எல்லாநாடுகளிலும் சட்டமாகவே இருக்கிறது. அதுமட்டுமல்ல வேலைக்குப் போகாத, அம்மா வீட்டில் வேண்டியவரை இருந்தவர்கள்தான் குழந்தை வளர்ப்புக்காக, நான் என் பதிவில் சுட்டிக்காட்டியிருக்கும் பெண்கள். உண்மையில் என் சித்தி அவரின் அம்மா வீட்டில்தான் இறந்துபோனதே. இதெல்லாம் வேறு பல காரணங்களால் வருபவை. அவையெல்லாம் வெளிப்படையாகப் பேசப்பட வேண்டியவையும்.

common sense பற்றிய உங்கள் கருத்தை ஒத்துக்கொள்கிறேன். அது மட்டும் இருந்தால் உலகத்தில் எந்தப் பிரச்சினையுமே இருக்காதே:)) அதென்னவோ மனிதப்பிறப்புக்குத்தான் அது மட்டும் குறைவாகவே இருந்து வருகிறது:))

 
At 12:45 AM, August 04, 2006, Blogger செல்வநாயகி said...

டிசே,

நன்றி.
//குழந்தை பிறந்தபின்னும், குழந்தையைப் போல இரண்டுமடங்கு ஒழுங்கான பராமரிப்பு பெற்ற தாயுக்கு அவசியம்///

முழுக்க உண்மைதான் அது.

 
At 6:10 AM, August 04, 2006, Blogger மணியன் said...

நிறைய விதயங்களை உள்ளடக்கிய பதிவு. பிரசவத்திற்கு பின்பான மன அழுத்தம் மட்டுமன்றி பிற மன அழுத்தங்களைப் பற்றிய அறிதலும் இப்போதுதான் பரவி வருகிறது. குழந்தை பெற்றோருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தாய்சேய்நல மருத்துவர் ஒரு முன்னறிதல் பிரசங்கம் கொடுக்கவேண்டியது அவசியமே.

குமரன் எண்ணம் கூறியது போல் நமது முன்னோர்கள் காலத்தில் சேர்ந்த குடும்பத்தின் அரவணைப்பினாலும் கட்டுப்படுத்தப்பட்ட உணவு, ஓய்வு முதலியவற்றாலும் சராசரி மாதருக்கு இவற்றின் தாக்கத்தைக் குறைத்தனர். பச்சை உடம்புக்காரி என்று எல்லோருமே காட்டும் கரிசனம், குழந்தையின் பராமரிப்பை குடும்பப் பெரியோரே எடுத்துக் கொள்ளுதல் ஆகியன தேவையான emotional support, rest முதலியன கொடுத்தன. ஆனால் abnormality ஆல் பிரச்சினை வரும்போது தகுந்த corrective measures இல்லாமல் பேயடித்துக் கொண்டிருந்தனர் என்பதும் உண்மை.

 
At 7:10 AM, August 04, 2006, Blogger மலைநாடான் said...

அவசியமான அறிவியலான பதிவு பகிர்ந்துகொண்டமைக்கு
மிக்க நன்றிகள்.

 
At 7:12 AM, August 04, 2006, Blogger Premalatha said...

http://lettersforall.blogspot.com/2006/08/my-dear-3.html
(about mothers and daughters)

 
At 8:34 AM, August 04, 2006, Blogger Pot"tea" kadai said...

அவசியமானதொரு பதிவு. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சேர்த்து தான். சில விடயங்களை நானும் அறிந்து கொண்டேன்.

நன்றி!

 
At 10:01 AM, August 04, 2006, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நல்ல கருத்தாழம் மிக்க பதிவு. நன்று. சரியான புரிந்துகொள்ளல் இன்றி ஊகங்களும் கற்பனைகளும் இட்டுக்கட்டிக் கொண்டவைகளுமாக உண்மைகள் மறைந்து போவதில் பலரும் மயங்கிவிடுகிறோம்.

பிரசவத்தின்பின் மனவழுத்த நோய் பற்றி முன்பு படித்திருக்கிறேன். புரிந்துகொண்டிருக்கிறேன். சிறிதளவு அருகில் இருந்து பார்த்தும் இருக்கிறேன். நல்ல பொதிவான சிந்தனைகளும், மகிழ்வும் நிறைந்திருக்கும் உடன்பணிபுரியும் நண்பர் ஒருவரின் மனைவி கூட இந்த அழுத்தத்திற்கு ஆளானதைப் பார்த்த போது அதன் தாக்கம் புரிந்திருக்கிறது.

கண் திறக்கும் இது போன்ற பதிவுகள் அவசியம். தொடருங்கள்.

 
At 10:35 AM, August 04, 2006, Blogger Premalatha said...

http://thenormalself.wordpress.com/2006/06/01/teaching/

 
At 3:51 PM, August 04, 2006, Blogger aathirai said...

என்னுடைய உறவில் ஒரு பெண்மணி ppdயில் பாதிக்கப்பட்டார்.
treatment எடுத்திருந்தாலும் ,பின்னர் கொஞ்சம் நிரந்தரமாகவே மனநிலை
பாதிப்பு உள்ளது. இந்தியாவில் உதவுவதற்கு அம்மா,பாட்டி, அக்கம் பக்கத்து
பெண்கள் என்று நிறைய பேர் இருப்பதால் அவ்வளவாக பாதிப்பு
இருக்காதென்று நினைக்கிறேன். வெளிநாட்டு nuclearlifestyle
இல் தனியாகவே பிரச்சினைகளை சமாளிக்கும்போது பிரச்சினையின்
தாக்கம் அதிகம்.

 
At 12:31 PM, August 05, 2006, Blogger செல்வநாயகி said...

மணியன், மலைநாடான், பொட்டிக்கடை, செல்வராஜ், ஆதிரை,

இப்பதிவு தொடர்பான உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

பிரேமலதா, உங்களின் சுட்டிகளுக்கு நன்றி.

 

Post a Comment

<< Home