சந்திப்பு
என் கவிதைகளை எங்கோ கடந்துபோன ஒரு
கங்காருவின் பைக்குள் ஒளித்துவைத்துவிட்டேன்
என் கதைகளையும் அப்படியே...
இடியோ, புயலோ எதுவும் கலைத்துபோடமுடியாத
அடிமனதின் மௌனத்தை
காட்டு முல்லையின் மணத்தோடு எப்போதும் எதையாவது மலரவைத்துக்கொண்டிருந்த அந்த மௌனத்தை
ஒரு மதியம் போய்நின்று
சுடுமணலின் தகிப்போடு கடல்மடிக்குள் எடுத்தெறிந்தேன்.
என் பாடல்கள், இசை என
எல்லாமும்கூடக் கண்மூடி உறங்கும்
ஒரு பிரமை எனக் காலம்
அதிசயக் கோள் ஒன்று முகிழ்த்தது போல்
இன்று மாலையில் கண்கள் கூசும் வெளிச்சம்
காட்டருவி விழ,
பூக்களை மிதக்கவிட்டு நதியொன்று ஓட,
ஈன்ற கன்றை வருடும் பசுவின் நாவாய்
ஈரம் சூழ்ந்த மனம் கசிய
இன்று என் எல்லாமும் என் முன்னே
ஆயிரமான நாட்களுக்குப் பிறகு
நான் உன்னை சந்தித்துத் திரும்பியிருக்கிறேன்
சாவிகளைத் தந்தபோதுதான் என் அறைகளைப் பூட்டியது
நீயென்று அறிந்தேன்.
19 Comments:
ஆயிரமான நாட்களுக்குப் பிறகு
நான் உன்னை சந்தித்துத் திரும்பியிருக்கிறேன் //
அருமை செல்வநாயகி.
பதிவுலகத்திற்கு திரும்பியதற்கு.
இனி அடிக்கடி எழுதுங்கள்.
சந்திப்பு தொடர வாழ்த்துக்கள்.
ஈன்ற கன்றை வருடும் பசுவின் நாவாய்
ஈரம் சூழ்ந்த மனம் கசிய
இன்று என் எல்லாமும் என் முன்னே //
மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ம்ம் .. ம் ..
அழகு கவிதை.. நாயகி... நீங்க நம்ம கொங்கு எழுத்தாளர்கள் ஆர். சண்முகசுந்தரம், c.r. ரவீந்திரன் கதைகள் படித்திருக்கிறீர்களா..
கோமதி அம்மா,
எப்போதேனும் உங்களைப் போன்ற வலைச் சொந்தங்களின் நினைவு வரும்போது எழுத்தும் வருகிறது:)) அன்புக்கு நன்றி.
ரமணி,
உங்களின் பாராட்டுதலுக்கு நன்றி.
தருமி,
என்ன சொல்லீட்டுப் போனீங்க? "ம்" ஐ எப்படி மொழிபெயர்ப்பது:))
நந்து,
நீங்கள் குற்ப்பிட்டவர்களைக் கொஞ்சம் படித்த நினைவு வருகிறது. நீங்கள் கொங்குப் பக்கம் என அறிய மகிழ்ச்சி.
ம்ம் .. ம் .. = கவிதை எனக்கு ரொம்ப தூரம். ஆனாலும் நீங்கள் எழுதினால் அது நல்லதாகவே இருக்கும். அதற்கு என் வாழ்த்து!
நானும் நீங்களும் ஒரே சமயத்தில் திரும்பியிருக்கிறோமோ செல்வநாயகி? இந்த நின்மதி எங்கு அலைந்தும் இல்லை தோழி. தொடர்ந்து எழுதுங்கள். இன்று, பழைய தமிழ்மணக் காலத்தை நினைத்துப் பார்த்தேன்...ம்ம்ம்...
'கண்மூடி உறங்கும் பிரமைக்காலமாய்'தான் எனதும்.
long time ...no see ...
நலமா ...?
அன்பிற்கினிய தருமி,
உங்கள் பின்னூட்டம் இன்றைய காலையை ஆனந்தமாக்கியது. நிறையச் சொல்ல வேண்டும். இயன்றால் உங்களின் மின்னஞ்சல் முகவரியைத் தாருங்கள்.
ஒரு புதிய பதிவொன்றிற்காக ‘பழைய பதிவர் நண்பர்கள்’ பலரைப் பற்றியும் நினைத்து ஒரு பட்டியலும் இட்டேன். பட்டியலில் உங்கள் பெயர் இருந்தமையால் ‘உங்களைத் தேடி’ உங்கள் பதிவுகளுக்கு வந்தேன்.
dharumi2@gmail.com
After long time, i have read your blog today.
wow....அழகு கவிதை!!!
இனி அடிக்கடி எழுதுங்கள்!!!
S.Ravi
Kuwait
Thank you Ravi. I will try my best.
3 years gone,,,,,,,,,
வாங்க.......
Dear Dharumi,
I am still too lazy to write here.I shall overcome someday:)) I am pleased to have your kind invitation. Thank you so much. You just made my day.
https://gmbat1649.blogspot.in/2016/07/blog-post.html பதிவில் உங்கள் பெயர் பார்த்தேன். ஒரு ஹலோ சொல்ல ஆசை.
ஹலோ ............. !!
தருமி,
என் வலைப்பதிவில் என்னை வருடம் ஒருமுறை எழுப்பி வணக்கம் சொல்ல வைக்கிறீர்கள்:)) உங்களுக்கு "வணக்கம்" சொல்லவேனும் நான் தமிழ் தட்ட வருகிறேன் என்பது எனக்கும் மகிழ்ச்சியே.
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News
செல்வநாயகி, வாழ்க வளமுடன்
நீங்கள் கொடுத்த காணொளி மிக அருமை.
குருமார்கள் இல்லாமல் மன அமைதி சாத்தியம் தான்.
தன்னை நம்புபவர்களுக்கு சாத்தியமே.
நீங்கள் கொடுத்து இருப்பது சிறியவர் முதல் பெரியவர் வரை பயனுள்ள காணொளி.
விழிப்புணர்வு காணொளி.
அம்மா !
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ! தொடர்ந்து you tube channel க்கு தொடர்ந்து வாருங்கள் !
Post a Comment
<< Home