நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, December 30, 2011

எல்லோர்க்கும் அன்புடன்....

எல்லோர்க்கும் அன்புடன் என்று இதைத் தொடங்கவேண்டுமா? அல்லது "ஏன் இந்தப்பக்கம் தலையே காட்டவில்லை என்று கைநீட்டி அழைத்த கயல்விழிமுத்துலட்சுமிக்கு அன்புடன் என இதைத் தொடங்க வேண்டுமா என்று தெரியவில்லை. அவர் அனுப்பிய கடிதத்தின் பின் தான் நெடுநாட்கள் கிடப்பில் போட்டிருந்த வலைப்பக்கம் பற்றிய ஞாபகம் தட்டியது. மரங்களின் மௌனத்தை ரசித்தபடி தரையில் தலைகிடத்தியிருக்கும் பட்டம் ஒரு திடீர் அசைவில் எழுந்தாடுவதுபோல் வாழ்வின் கணங்களும், எழுத்தும் எல்லாம்.

ஓரிரு நாட்களில் புத்தாண்டு தொடங்குகிறது. இதையெல்லாம் சலனமின்றிக் கடந்துகொண்டிருந்த மனதில் வழமைக்கு மாற்றாய் எண்ணப் பின்னல்கள். பழைய வரவு செலவுக் கணக்கென்று பார்த்தால் மகிழ்ச்சி, வருத்தம், நண்பர்கள், பகைவர்கள், லட்சியம், அலட்சியம் என்று சகலவற்றிலும் கொஞ்சம் சம்பாதித்தோம், கொஞ்சம் இழந்தோம் என்று கடந்த ஆண்டைச் சுருட்டி வைத்துவிடலாம்தான். ஆனாலும் பன்னிரண்டுக்கொரு முறை தலைநீட்டும் குறிஞ்சியாக மூச்சுமுட்டும் லௌகீகப் பயணத்தில் கொஞ்சமே கொஞ்சமேனும் மானுட சீவிதத்தில் நிறைவு கொள்ளும்படியான செயல்களை அடையாளம் கண்டு இணைந்துகொள்ள வைத்த வகையில் 2011 ஒரு நல்ல ஆண்டே.

இனிவரும் ஆன்டு தனக்குள் என்னென்ன ஒளித்துவைத்திருக்கிறதென்பது போகப்போகப் புலனாகும். ஒரு மயிலின் விரிக்காத தோகையைப்போல் அது இப்போது வெறுமனே நீண்டு கிடக்கிறது. இதுவரை பார்த்திருக்காத ஒரு பூவின் நிறத்தை, அறிந்திருக்காத தொடுகையை, கேட்டு மறந்துபோன பாட்டொன்றின் மெட்டை, புதிய காதலொன்றின் மலர்ச்சியை, வடிவமற்ற வெளியொன்றின் தொடக்கத்தை, எங்கோ விட்டுப்போனதொன்றின் தொடர்ச்சியை இப்படி எதையும் இனிவரும் ஆண்டும் வழங்கலாம். கேட்டதைக் கொடுக்கும்படியான ஆண்டாகவோ அல்லது கொடுத்ததை ஏற்கும்படியான மனம் தரும் ஆண்டாகவோ 2012 எல்லோர்க்கும் அமையட்டும். எனக்கு எப்போதேனுமேனும் இங்கே எழுத வந்துபோகும்படியான ஆண்டாகவும் 2012 அமையட்டும்:))

12 Comments:

At 10:51 PM, December 30, 2011, Blogger தருமி said...

//கைநீட்டி அழைத்த கயல்விழிமுத்துலட்சுமிக்கு...// மிக்க நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள்.

 
At 2:00 AM, December 31, 2011, Blogger கோபிநாத் said...

\\கேட்டதைக் கொடுக்கும்படியான ஆண்டாகவோ அல்லது கொடுத்ததை ஏற்கும்படியான மனம் தரும் ஆண்டாகவோ 2012 எல்லோர்க்கும் அமையட்டும்.\\

நல்லது ! ;-)

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ;-)

 
At 2:05 AM, December 31, 2011, Blogger கோபிநாத் said...

ஒரு ரசிகனின் வேண்டுக்கோள். அய்யன் கதைகள் வரும் வருடத்தில் தொடர்ந்து எழுத வேண்டும்!

இப்படிக்கு
அய்யன் கதைகளின் ரசிகன்

 
At 3:45 AM, December 31, 2011, Blogger கோமதி அரசு said...

கேட்டதைக் கொடுக்கும்படியான ஆண்டாகவோ அல்லது கொடுத்ததை ஏற்கும்படியான மனம் தரும் ஆண்டாகவோ 2012 எல்லோர்க்கும் அமையட்டும். எனக்கு எப்போதேனுமேனும் இங்கே எழுத வந்துபோகும்படியான ஆண்டாகவும் 2012 அமையட்டும்:))//

நல்ல வேண்டுதல். அப்படியே நடக்கட்டும். என்று வாழ்த்துகிறேன் செல்வநாயகி.

கேட்டதை கொடுத்தால் சந்தோஷம் படும் மனசு, கொடுத்த்தை மனநிறைவாக ஏற்றுக் கொள்ளும் மனமும் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டில் எல்லோருக்கும்.

நீங்கள் அடிக்கடி எழுதி எங்களை மகிழ செய்யவேண்டும். என் மகளின் வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு நன்றி.

முத்துலெட்சுமிக்கும் நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
At 11:39 AM, December 31, 2011, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட புத்தாண்டின் மலர்ச்சி இப்பயே தொடங்கிடுச்சே.. எனக்கு..:)
நன்றி நன்றி.. அன்புக்கு நன்றி..

மரங்களின் மௌனத்தை ரசிக்கலாம் தோழி.. மனிதர்களின் மௌனம் அப்படி இல்லையே..

 
At 2:02 PM, December 31, 2011, Blogger செல்வநாயகி said...

தருமி, கோமதியம்மா, முத்து,

நன்றி.

கோபிநாத்,

அய்யன் கதைகளைத் தொடர முயல்வேன். நினைவூட்டலுக்கு நன்றி.

 
At 8:14 PM, January 06, 2012, Blogger raki said...

நல் வரவு சகோதரி

நீண்ட நாட்களாக ஏதும் பகிரவில்லையே. பயன்பெற காத்திருகின்றோம்

தங்களுக்கும் இனிய புத்தாண்டு மற்றும் கனிவான பொங்கல் நல் வாழ்த்துக்கள்

ராதாகிருஷ்ணன்

 
At 2:09 PM, January 07, 2012, Blogger செல்வநாயகி said...

நன்றி ராதாகிருஷ்ணன்.

 
At 11:26 PM, April 29, 2012, Blogger செந்திலான் said...

மூணு மாசமாச்சு இன்னும் அடுத்த பதிவக் காணோம்

 
At 7:34 AM, April 30, 2012, Blogger செல்வநாயகி said...

//மூணு மாசமாச்சு இன்னும் அடுத்த பதிவக் காணோம்///

Coming soon...... Thank you.

 
At 8:57 AM, April 30, 2012, Blogger தருமி said...

promises are made to be broken!!

 
At 12:46 PM, April 30, 2012, Blogger செல்வநாயகி said...

///promises are made to be broken!!//

:)) Really missing all of you.

 

Post a Comment

<< Home