நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Tuesday, June 29, 2010

கூடுகளான சொற்கள்

கண்களை மூடும் இமைகளின் கவனத்தோடு தேர்ந்தெடுத்தேன்
அதிர்வென்பது சிறிதும் வெளிப்படாது ஒவ்வொரு எழுத்தாய் அணைத்தெடுத்தேன்
பின் குழைத்தெடுத்த அன்புச் சேற்றில் பதியனிட்டதும் நீரூற்றியதும்
நான் யாருக்கும் அறிவித்திராத ரகசியங்களின் பரணில் உண்டு
நீ உன் கொற்றம் புடைசூழ வாசலில் வந்து நின்று
தம்பட்டம் அடித்துக்கொள்கிறாய் என் சிறு புன்னகையை
கண்களின் வழி ஒழுகிய முத்தத்தின் ஈரத்தை
உனக்கு மட்டுமேயென நான் உதிர்த்த ஒரு தனிச்சொல்லை

வெற்றிகொண்டுவிட்டதான உன் ராசகுமாரக் குதிரைக் குழம்படிகள்
வீதிகளெங்கும் பேரிடியாக ஒலித்தபடி இருக்க
என் சொற்களில் பொதிந்திருந்த எழுத்துக்களை
உனக்கானவையல்ல எனப் பிய்த்தெறிந்துவிடுகிறேன் நான்
காற்றில் அவை இனி வெறும் கூடுகளாக அலைந்துகொண்டிருக்கும்
நான் உனக்குச் சொல்ல விரும்பிய காதலின் சாட்சிகளாக

10 Comments:

At 12:37 AM, June 30, 2010, Blogger உயிரோடை said...

//கூடுகளான சொற்கள்//
த‌லைப்பே அருமை

//கண்களை மூடும் இமைகளின் கவனத்தோடு தேர்ந்தெடுத்தேன்//
மிக‌வும் பிடித்த‌து.

ந‌ல்ல‌ க‌விதை. உங்க‌ள் க‌விதையை ஒரு ந‌ட்பிற்காக‌(ச‌கோத‌ர‌ன் என்று நினைத்த‌ ந‌ட்பிற்காக‌) அது விழைத்த‌ துரோக‌த்திற்காக‌ சில‌ வார்த்தைக‌ளை ம‌ட்டும் மாற்றி வாசித்துக் கொள்கிறேன்.

 
At 7:57 AM, June 30, 2010, Blogger நேசமித்ரன் said...

மிக நன்றாக இருக்கிறது தலைப்பும்
கவிதையின் உள்ளிருக்கும் வதையும்

 
At 2:20 PM, June 30, 2010, Blogger அமைதிச்சாரல் said...

ரொம்ப பிடிச்சிருக்கு.

 
At 3:43 PM, June 30, 2010, Blogger பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்குங்க.

 
At 6:11 PM, June 30, 2010, Blogger ஹேமா said...

காதலின் அதிர்வலைகளைக் காற்றில் அலையும் கூடுகளாக்கி விட்டிருக்கிறீர்கள்.அருமை.வலி.

 
At 9:55 PM, June 30, 2010, Blogger செல்வநாயகி said...

நண்பர்களின் மறுமொழிகளுக்கு நன்றி.

 
At 11:47 AM, July 03, 2010, Blogger Geetha said...

கூடுகளான சொற்கள் அருமை

 
At 1:17 PM, July 03, 2010, Blogger செல்வநாயகி said...

நன்றி கீதா.

 
At 2:09 PM, December 28, 2010, Blogger Thekkikattan|தெகா said...

ஹ்ம்ம்ம்...

நல்லா இருக்கியளா?

 
At 3:05 PM, December 28, 2010, Blogger செல்வநாயகி said...

தெகா,

நலமே, உங்கள் அன்புக்கு நன்றி.

 

Post a Comment

<< Home