குகையறிந்த குறிப்புகள்
அசைவுறா மௌனங்களாய் அந்தக்குகைகள் நிற்கின்றன
ஆராய்ச்சியாளர்களின் அளவைகளில் அவை இல்லை
வீசும் காற்றில் மெல்லிசையைக் கசியவிட்டு , கடப்பவர் வழியில் சிற்றதிர்வைப் பரப்பி
தம் இருப்பைத் தாமாகவும் அறிவித்துக்கொள்ளவில்லை குகைகள்
மழையடித்த பகலில் தான் ஈன்று புறந்தள்ளிய உயிரின்மீது
புலித்தாயொன்று ஒழுக்கிய பரிவின் ஈரம் குகைவாசலில் உண்டு
சிங்கத்தின் காலடியில் கண்கள் வெறித்தடங்கிய மான்களிலிருந்து
வலுத்தவன் இளைத்தவன் வரலாறுகளை உள்வாங்கி
வருடங்களாய் வைத்திருக்கின்றன குகைகளின் கண்கள்
சூழ்ச்சிகளைக் கைக்கொள்வது எப்படியென்ற புனிதநரிகளின்
பாலபாடங்கள் நடப்பதற்குத் தேர்வான இடங்களில்
குகைகளின் இருள்கவிந்த உட்பக்கங்களும் உண்டு
நீங்கள் எப்போதும் வாசிக்கிற நெய்வடியும் கதைகளுக்குமப்பால்
வாசனையற்று அரூபித்திருக்கின்றன
சிங்கம், புலி, நரிகளின்
குகையறிந்த குறிப்புகள்
17 Comments:
புரியுது, ஆனா புரியல :D , படமும் செம...
உருவக கவிதைதானே..உருக வைக்கிறது.
அருமைங்க.
தெகா, தாராபுரத்துக்காரர், ராஜாராம்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அருமை !!! :)
ரொம்ப நல்லா இருக்குங்க
பதி, நேசமித்ரன்,
நன்றி.
'குகையறிந்த குறிப்புகள்/
டைட்டிலே அருமை.
அறிந்ததும் அறிவதும், அறிய இருப்பதும் அவரவர்களுக்கான விதிகள்.
நல்லாருக்கு.
வாழ்த்துகள்.
ஆடுமாடு, நன்றி.
குகையைத் தாண்டி வேற ஏதோ ஒண்ணு இருக்கு..அது எனக்கு சரியா புரியலை..ஆனா, இறுதி நான்கு வரிகள் - பிடிச்சமாதிரி இருக்கு! :-)
//நீங்கள் எப்போதும் வாசிக்கிற நெய்வடியும் கதைகளுக்குமப்பால்//
போற போக்குல போட்டு தாக்கறீங்க :)
நல்லாயிருக்கு..கலவரமாவும் :))
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
சந்தனமுல்லை, ரௌத்ரன் , www.bogy.in, நன்றி.
purinthum puriyaamalum...
aanaal...
thalaipu mattum vaseekaramaai ullathunga!
இரசிகை, நன்றி.
இன்றுதான் படிக்க முடிந்தது. மிகவும் அருமை. நன்றி.
நன்றி.
Post a Comment
<< Home