நட்பெனப்படுவது
மேரியைச் சந்தித்து வருடங்கள் ஆகிவிட்டன
ஒரு சின்னப் பூனைக்குட்டியின்
மினுமினுக்கும் கண்கள் மேரியினுடையவை
கிலுவ மரத்தின் மேல் படர்ந்திருந்த
கண்ணுவலிப்பூவின் மஞ்சளுக்கு மேலான சிவப்பு
மேரியின் கண்களிலும் இருப்பதாய் உணர்ந்தபோதில்
அவை மேலுமொரு ஈர்ப்பைத் தந்தன
நடைபாதையில், நீரோடைக்கருகில், பல்பொருள் அங்காடியில்
எங்கு சந்தித்தாலும்
மேரியின் கண்கள் சொல்லியவை ஒன்றுதான்
ஊர்விட்டு வரும்போது விடைபெற்றுக்கொள்கையிலும்
அக் கண்களைப் பிரிவது சங்கடமாய் இருந்தது
மேரியைச் சந்தித்து வருடங்கள் ஆகிவிட்டன
இன்று நீதாவைப் பார்க்கப்போவது மேரிக்காகத்தான்
ஊருக்கிரண்டாய் இல்லாமல் போவதில்லை மேரியின் கண்கள்
8 Comments:
நானும் இந்த மாதிரி மேரிகளை நிறைய பார்த்திருக்கிறேன். பேசாவிட்டாலும் தினமும் பஸ்ஸிலோ அல்லது மதிய நடையிலோ பார்ப்பதுண்டு.
எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க கவிதை.
நல்லாருக்கீங்களா செல்வநாயகி?! :-)
கவிதை நல்லாருக்கு. ரொம்ப நாளா பார்க்க முடியலையே..உங்களையும் அய்யன் கதைகளையும்!!
//கிலுவ மரத்தின் மேல் படர்ந்திருந்த
கண்ணுவலிப்பூவின் மஞ்சளுக்கு மேலான சிவப்பு
மேரியின் கண்களிலும் இருப்பதாய் உணர்ந்தபோதில் //
மிக அரிதாகவே நவீன தமிழ்க்கவிதைகளில் இயற்கை, சூழல் சார்ந்த குறிப்புகள் இடம்பெறுகின்றன. 'ஒரு மர நிழலில்' ஒரு பறவையின் குரலில்' என்று சூழல் அடையாளம் இழந்து தமிழ்க் கவிதையின் மரபுக்கு அன்னியமாகவே இருக்கின்றன.
இந்நிலையில் இப்படி ஒரு கவிதைக்கு நன்றி.
ரொம்ப நாளா ஆளை பார்க்க முடியல
உஙகளை
நல்ல கவிதையோட வந்திருக்கீஙக
நுட்பமான வலியை பதிவு செய்திருக்கீங்க உஙளுக்கெ உரிய தனித்துவ மொழியில
:)
மறுமொழியிட்ட நண்பர்களுக்கு நன்றி.
முல்லை, நேசமித்ரன்,
இப்படி அடிக்கடி காணாமல்போவதுதான் இயல்பென்றே வாய்த்துவிட்டது:))
அட! நீங்களா????????????
நலமா செல்வா?
'பார்த்து' ரொம்ப நாளாச்சேப்பா........
துளசிம்மா,
நலமே, நன்றி.
Post a Comment
<< Home