வாழும் கலை
கடலின் மடியில் கட்டிவைத்திருந்த காற்று
அவிழ்ந்து சுழன்றதில்
பூமி நின்று சூரியன் சுற்றத் தொடங்குகிறது
அந்த ராத்திரியின் ரகசியங்கள் பீறிட்டுத் தெளித்த
பயத்தில் நனைந்துகொன்டிருக்கிறது
அவ்விஞ்ஞானியின் டைரி
எல்லாம் கலைந்துகிடக்கும் அந்த இடம்தான்
தான் சனித்த இடம் என்கிறான் ஹிட்லர்
சூட்சுமம் புரியாத வெளியொன்றில்
பசியால் தவித்த கர்ப்பிணி
பிள்ளையைப் பிரசவித்துத் தின்னத் துணிகிறாள்.
8 Comments:
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?
அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
//பசியால் தவித்த கர்ப்பிணி
பிள்ளையைப் பிரசவித்துத் தின்னத் துணிகிறாள்.//
அற்புதம்
நேசமித்ரன்,
இதை நீங்கள், சமவெளிமான் எழுதிய அய்யனார்
போன்ற மேஜிக்கல் ரியலிச, ரியல் மேஜிக்கல் எழுத்தாளர்களுக்கு அர்ப்பணிக்கும் குறிப்பை எழுத நினைத்திருந்து பின் மறந்து போனேன்:)) அதனாலென்ன இப்போது சொன்னதாய் எடுத்துக்கொள்ளுங்கள்:))
ஞானி,
விளம்பரமா:)) நடத்துங்க நடத்துங்க:)) "ஆமா இப்படி மொட்டையா 500 ரூபா கொடுங்க நல்ல படமா வரும்" னு சொன்னா எப்படி? எந்தப் படைப்பை இப்ப எடுக்கத் திட்டமிடறீங்கன்னு ஒரு குறிப்பு இருந்தால் வேண்டியவர்கள் வேண்டியதைத் தேர்ந்துகொள்ள வசதிப்படுமல்லவா?
சென்ஷி,
அப்ப இன்னும் இதேபாணியில் எழுதலாம்ங்கறீங்க:))
அடர்த்தியும், உயர்த்துடிப்பும் கொண்ட வரிகள். கலையாமல் இருக்கின்றன.
என்னாச்சுன்னே தெரியலயே..காலையிலேர்ந்து கண்ண கட்டுற வலையாவே கண்ணுக்கு தட்டுப்படுதே:)
நல்லாயிருக்குங்க...
great.. i liked it a lot..
i have added this poem to the படித்தது / பிடித்தது series in my site:
http://www.writercsk.com/2009/10/72.html
கட்டுரை வடிவம் கைக்குள் ஓரளவுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த கவிதை வடிவங்கள் இன்னும் அடங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. ரொம்ப ஆசை. ஆனால் உங்கள் எழுத்துக்களை படித்துவிட்டு கொஞ்சம் கற்றுக் கொண்டு தான் முயற்சிக்க வேண்டும் போல் உள்ளது.
Post a Comment
<< Home