நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, August 31, 2009

காதல் அறிவித்தல்




தானே பின்னிய வலைக்குள்
வெளிவருதலறியாது சிக்குண்டபோதும்
அது தவம் நோற்பதாய்ச் சொல்லப்பட்டது சிலந்தி
நெடுநேர‌மாய் ந‌ட‌ந்துகொண்டிருக்கும்
பாலைவ‌ன‌த்துப் ப‌ய‌ணிக்குச்
ச‌ப்பாத்திக்க‌ள்ளியின் இலைக‌ளில்
தேங்கியிருக்கிற‌து அவ‌னேய‌றிந்திராத‌
அவ‌ன் தாக‌த்திற்கான‌ நீர்
ஊதுப‌த்தி ம‌ண‌மும், ச‌ம்ப‌ங்கி வாச‌னையும்
ஒரு சிறுவிள‌க்கின் வெளிச்ச‌மும்
ப‌ர‌வும் ப‌ர‌ப்புக்குக் கீழே
ஒரு ம‌னுச‌னோ ம‌னுசியோ
புதைக்க‌ப்ப‌ட்டிருக்க‌வும்கூடும்

இன்று இதையெல்லாம் நினைத்துக்கொள்வ‌த‌ற்கு
பெரிதான‌ கார‌ண‌ங்க‌ள் வேறொன்றுமில்லை
அவ‌னும் அவ‌ளும் காத‌லிக்க‌த் தொட‌ங்குவ‌தாக அறிவித்திருப்ப‌த‌ன்றி

7 Comments:

At 12:18 AM, September 01, 2009, Blogger சந்தனமுல்லை said...

நல்லாருக்குங்க! :-)

அப்புறம், அய்யன் கதை எப்போ?! வெய்டிங்!

 
At 1:23 AM, September 02, 2009, Blogger நேசமித்ரன் said...

மிக அணுக்கமான உணர்வுகளை அற்புதமா சொல்லி இருக்கீங்க // அவனே அறிந்தீராத ..//
எந்த வரியை சொல்ல எதை விட
அற்புதம்ங்க

 
At 10:07 AM, September 02, 2009, Blogger செல்வநாயகி said...

முல்லை,

நன்றி. அய்யன் கதை எழுதணும், இந்த வாரமாவது முடிகிறதா பார்க்கிறேன்:))

நேசமித்ரன்,
நன்றி.

 
At 10:27 AM, September 02, 2009, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்..

 
At 10:43 AM, September 02, 2009, Blogger சென்ஷி said...

நல்லாயிருக்குங்க

 
At 1:55 PM, September 02, 2009, Blogger பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்குங்க செல்வநாயகி.
சந்தன முல்லை,நானும் கேக்கணும் என்று இருந்தேன்.
நீங்க கேட்டுட்டிங்க.காத்துகிட்டு இருக்கோம்,செ.நா.

 
At 2:25 PM, September 02, 2009, Blogger செல்வநாயகி said...

முத்து,
வரவர நீங்க பின்னவீனத்துவ விமர்சனம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க பதிவுகளுக்கு:))

சென்ஷி,
வருகைக்கு நன்றி.

நன்றி ராஜாராம். நீங்களும் அய்யன் கதையைக் கவனித்து வருகிறீர்களா? போச்சுடா:)) ஏதோ ரெண்டு கதை சுமாராக எழுதிவிட்டேன் போலிருக்கிறது, இனியும் அதை ஒழுங்காக நகர்த்த வேண்டுமே என்ற கவலையை உங்களின் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்துகின்றன:))

 

Post a Comment

<< Home