சூரியனைக் கொன்ற இரவு
கடிகார முட்களுக்கு நடுவே எண்களை எண்ணிக்கொண்டிருக்கும்
நாளின் எந்த இடைவெளியிலும்
இயல்பாய் என் நினைவுகளில் இறங்குகிறதுன்பாதை
பொட்டல் வெளியெங்கும் கருவேலமரங்களெனப்
பசுமை தொலைத்த இக்கோடையில்
மழைக்கான நம்பிக்கையாய்ச் சித்திரைப்பூச்சி நீ
உன் கத்தல் காது நிறைக்கிறது
செடிகளையல்ல மரங்களையே தொட்டிகளில் வளர்த்துக்
காட்சிப்படுத்தி விடமுடியும் வீதிகளில்
நீ கொண்டலையும் வனக் கனவுகள்
சிதறி விழுகின்றன என் விரித்த கைகளில்
போர் தொடுப்பதான பாவனையில்
ஒவ்வொரு சந்திப்பிலும் கடந்துபோதல் எதற்கென
பலாப்பழத் தோல் பிளந்து
சொல்லிவிடலாம்தான் நேசத்தை
பிறகு புலரும் பொழுதொன்றில்
உன் மாயச்சந்துகளிலிருந்தும் நீளும்
எசமானக் கயிறொன்று
என்னை அடிமையாய்க் கேட்கும்
வேண்டாம் இப்படியே இருப்போம்
சூரியனைக்கொன்ற இரவில்
நட்சத்திரங்கள் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன
15 Comments:
படத்துக்கு நன்றி:-
dreamsview.net
/சொல்லிவிடலாம்தான் நேசத்தை
பிறகு புலரும் பொழுதொன்றில்
உன் மாயச்சந்துகளிலிருந்தும் நீளும்
எசமானக் கயிறொன்று
என்னை அடிமையாய்க் கேட்கும்/
என்னாலே இதை புரிஞ்சுக்க முடியுது,செல்வநாயகி! ரசித்தேன்!
நட்சத்திரங்கள் ஒளிரும் இரவு அழகு.
செல்வநாயகி,உங்கள் கவிதை அழகு.
//சொல்லிவிடலாம்தான் நேசத்தை
பிறகு புலரும் பொழுதொன்றில்
உன் மாயச்சந்துகளிலிருந்தும் நீளும்
எசமானக் கயிறொன்று
என்னை அடிமையாய்க் கேட்கும்//
இந்த வரிகளை என் தளத்தில் ஒட்டிக் கொண்டேன் நன்றி
:)
கவிதைகள் வாசிக்கும் கணங்களெல்லாம்
கவனமாகவே மறைக்க வேண்டியதாயிருக்கிறது
அடையாளங்கள் அகப்பட்ட
சொற்களின் மர்மங்களுக்குள்
அந்தரங்களை ருசிக்கும்
குரூரங்களின் சிதைவுகளை!
ம்ஹும் , அரைகுறையாத்தான் புரிஞ்சுது. இருந்தாலும், பின்னூட்டங்களில் ஹைலைட் பண்ணப்பட்ட வரிகள் பசக்கின்னு புரியுது...
முல்லை, கோமதி அம்மா, நேசமித்ரன், முத்துக்குமரன்,
உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.
தெகா,
:)) நன்றி.
//போர் தொடுப்பதான பாவனையில்
ஒவ்வொரு சந்திப்பிலும் கடந்துபோதல் எதற்கென
பலாப்பழத் தோல் பிளந்து
சொல்லிவிடலாம்தான் நேசத்தை //
நல்லாயிருக்கு....
கவிதை ரொம்ப நல்லாயிருக்குன்னு தான் சொல்லணும். ஏன்னா மத்தவங்க அப்படித்தான் சொல்லியிருக்காங்க! புரிஞ்சவங்களே நல்லாயிருக்குன்னு சொல்லும்போது புரியாத நான் வேறென்ன சொல்லப்போறேன்? நல்லாயிருக்குங்க! :-))
சங்கவி நன்றி.
சேட்டைக்காரன்,
உங்கள் விமர்சனம் நன்று:))
கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க :)
ரௌத்ரன் நன்றி.
கவிதை நன்றாக இருக்கின்றது. சூரியனை கொன்ற இரவு வித்தியாசமான சிந்தனை
நன்றி உயிரோடை.
Post a Comment
<< Home