வெறும் நாள்
ஒரு வெறும் நாளின் அசைவுகளை எந்த மொழியிலும் பொருத்த முடியவில்லை
வெறும் நாள் சுருண்டு படுத்திருந்த பாம்பு தலைதூக்கிப்பார்ப்பதுபோல் விடிந்தது.
வாசலில் எந்தநாளும் போட்டிராத கோலத்திற்காகப் புள்ளிகளை மட்டும் அது வைத்தது
தன் நியாயங்களைச் சுவற்றில் கோடுகளாகக் கிழித்தது
மதியத்து வாசலில் ஒரேயொரு வெள்ளைப்பூவை உதிர்த்தது
எதுவும் சொல்லாமல் கையசைத்துச் சென்று மறைந்தது
தூங்குகிற குழந்தையின் கைகள் விரித்தபோது கவனித்தேன்
கனமான மலையொன்றாய்க் கடந்து மறைந்த வெறும் நாளின் அசைவுகள்
உவமையற்ற மென்மையை எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறது
யாரொருவரும் கையளிக்காத ஆதூரத்தில் நனைத்தெடுத்து
17 Comments:
ரொம்ப நல்லாருக்கு....செல்வ நாயகி!! மிகவும் பிடித்திருக்கிறது!
அருமை மிக அருமை நன்றி மனம் லயித்து எழுதுவதற்கு எம்மையும் லயத்தில் ஆழ்த்துவதற்கு
ராதாகிருஷ்ணன்
வெறும் நாள்... ரொம்ப சிந்திக்க வைச்ச கவிதை. நல்லா இருக்கு. வாழ்த்துகள்
அழகாகவும் ஆழமாகவும் இருக்கிறது. நன்றி.
செல்வ நாயகி..!
தனிமையின் மௌனங்கள் மீது கல்லெறிந்து விட்டு போகிறது வெறும் நாளின் அந்தி
நன்றி
தலைப்பும் ரொம்ப பிடிச்சிருந்தது..
நன்றி நண்பர்களே.
நன்றி!,மிக அருமை
நன்றி ரவி.
ரொம்ப பிடிச்சுருக்கு செல்வநாயகி இந்த கவிதை...
//கனமான மலையொன்றாய் கடந்து மறைந்த வெறும் நாளின் அசைவுகள்//
ஆம் செல்வநாயகி, வெறும் நாளின் அசைவுகள் கனமான மலைதான்.
கோமதி அம்மா, ரௌத்ரன்,
நன்றி.
அவரவர் இடம் அவரவரிடமே இருக்கிறது, வெகு நாட்களுக்குப்பிறகு ஒரு வெறும் நாள் வந்து நிரூபித்திருக்கிறது இதை.
தமிழன்-கறுப்பி நன்றி.
அடிக்கடி அனுபவித்த வெறும் நாள்!
நல்லதொரு சிந்தனை
வாழ்த்துக்கள்
//வாசலில் எந்தநாளும் போட்டிராத கோலத்திற்காக//
கூகூ.. இந்த வரிகள் மிக அழகு.
Post a Comment
<< Home