நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, February 26, 2007

எனக்குப் பணம் வேணும்

"நிலாவைப்பற்றியும், நட்சத்திரங்களைப்பற்றியும் என்னிடம் கேள்விகள் கேட்பதும், தானே உருவாக்கிய கதைகளைச் சொல்வதுமாய் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த என் மூன்றரை வயது மகள் திடீரென இவற்றையெல்லாம் பேசுவதை நிறுத்தியிருந்தாள். யோசித்தபிறகு காரணம் தெரிந்தது. நான் அவளைப் பள்ளியில் சேர்த்துவிட்டேன். பாடப்புத்தகங்களின் சுமையில் அவள் இந்தக்கதைகளை மறந்துபோயிருந்தாள்"
- அப்துல்ரகுமான் -

"மற்ற பிள்ளைகள் எல்லாம் தலைகுனிந்து பாடத்தில் நிலைகுத்தியிருக்க ஒருவன்மட்டும் தன் பிஞ்சுக்கைகளால் கண்கள் தேய்த்து அழுதுகொண்டிருந்தான். கனிவோடு தூக்கிநிறுத்திக் கரணம் கேட்கிறேன். "உங்களின் கட்டம்போட்ட சட்டை பார்த்துச் செத்துப்போன என் அப்பா ஞாபகம். அவரும் கட்டம்போட்ட சட்டைதான் போடுவார்". தலைதடவி அமரச்செய்து முடிவுசெய்கிறேன் "இனிமேல் பாடம் நடத்த மட்டுமல்ல சட்டைபோடவும் அட்டவணை போடவேண்டும் நான்".

-கரும்பலகையில் எழுதாதவை எனும் நூலில் ஒரு ஆசிரியக்கவிஞர் -



குழந்தைகளின் உலகம் அழகானது. இரண்டு இலைகளுக்கு இடையே முளைவிடும் சிறுதளிரின் உற்சாகத்துடன்தான் ஒவ்வொரு குழந்தையும் இந்தப் பூமிக்கு வருகிறது. குழந்தைகள் அவர்களின் பெற்றோருக்குப் பெயர்சொல்லும் வாரிசுகள் மட்டுமல்ல. மிகவிரைவாய் ஓடிமறைந்துவிடும் காலச்சுழற்சியில் இரண்டு அல்லது மூன்று பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு தேசத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்கிறவர்கள். அந்த
தேசத்தின் அடையாளத்தை உலகுக்குச் சொல்கிறவர்கள். இன்னும் சொல்லப்போனால் முந்தையோரிடமிருந்து வாழ்க்கையை வாங்கிப் பத்திரமாக வைத்திருந்து நாளை இன்னுமொரு கைகளுக்குச் சேர்ப்பிக்கிறவர்கள். இவர்கள் முக்கியமானவர்கள். எனவே இவர்களின் நலனை மேம்படுத்துவதில் ஒரு சமூகத்துக்கு, ஒரு அரசுக்கு
நிறையப் பங்கிருக்கிறது.

ஏழெட்டுப் பிள்ளைகளைப் பெற்றுப் பாதிக்குமேல் காலனுக்குப் பறிகொடுத்து மிஞ்சியவற்றை மட்டும் தக்கவைத்துக்கொண்ட கதைகள் நம் முப்பாட்டன், பாட்டன் தலைமுறைகளில் சாதாரணம். இப்போது அளவோடு பெற்றுக் கருத்தோடு வளர்க்கும் முறைக்கு இத்தலைமுறை தாவிவிட்டாலும் குழந்தைகள் நலனில் நாம் இன்னும் குறிப்பிட்டதூரம் போகவேண்டியிருக்கிறது. அடிப்படைக்கல்விகூடப் பெறமுடியாமல் வறுமையின் காரணமாய் டீக்கடை, வொர்க்சாப், பண்ணைநிலங்கள், பணக்காரரின் வீடுகள் என வேலைசெய்து களைக்கும் குழந்தைகள், உருக்கும் வெய்யிலில் ஊர்கூடிநிற்க உறுமிமேளம் கொட்டிப் பின் சவுக்கால் தன் தோல்கீறித் தகப்பன்கள் சொட்டும் ரத்தத்தைத் தரையில் மல்லாந்து படுத்து நெஞ்சில் ஏந்தும் பிஞ்சுகள், நாகரீகக்கனவான்களாய்ப் பேருந்தில் ஏறிஅமர்ந்து நாம் செய்தித்தாள் விரிக்கையில் இடுப்பில் சிறுகுழந்தை சுமந்தபடித் தட்டேந்தி நிற்கும் தளிர்கள், பெரியமனிதர்களின் வக்கிரங்களுக்குப் பலியாகி நொய்டாவில் தொலைந்துபோகும் மழலைகள் என்ற சோகக்குறிப்புகளற்ற சமூகம் நம் கனவு.

இப்படியொரு சமூகத்தைக் கட்டியமைப்பதில் தனிமனிதர்கள், அரசு என்ற இரு கரங்களும் இணைந்து செயலாற்றவேண்டியிருக்கிறது. இந்திய சமூகத்தில் குழந்தைகளின் நலனுக்கான திட்டங்களும், கொள்கைகளும் சீரியமுறையில் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் தன் அதிர்ப்தியைச் சொல்லி மேலும் கணிசமான தொகை ஒதுக்கப்படவேண்டும் என வலியுறுத்தி வருகிறார் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ரேணுகா சௌத்ரி. அவர் கோரிக்கை நியாயமானது.


தம் பணிகளில் ஒன்றாக இந்தியக்குழந்தைகளின் பிரச்சினைகளைக் கண்டறிந்தும், அவை களையப்படுவதில் முனைந்தும் வருகிற யுனிசெப் அமைப்பு பல்வேறு செய்திகளைச் சுட்டிக்காட்டுகிறது. சமீபகாலங்களில் பொருளாதாரத்துறையில் ஒரு வேகமான வளர்ச்சியை இந்தியா தகவல்தொழில்நுட்பம் போன்ற துறைகளில் எட்டிப்பிடித்தாலும் அது பரவலாக்கப்பட்ட சீரான சமூக வளர்ச்சியிலும் முன்னெடுக்கப்படவேண்டும் என்கிறது
அவ்வமைப்பு. இதுகுறித்தான யுனிசெப்பின் குறிப்புகள் கீழே:-

Economic growth in India has been strong over the past decade, especially in the information technology sector. But this rising tide has not lifted all boats. Significant disparities remain, based on class, caste, gender and geography. The new United Progressive Alliance coalition government, which came into power
in May 2004, has pledged to emphasize social development as part of its National Common Minimum Programme. It seeks to eliminate some of the inequalities in Indian society by reducing poverty, increasing public spending on education, speeding the delivery of health services and improving nutrition and food security.

Issues facing children in India

1. Polio remains a serious threat, notwithstanding a massive campaign to eradicate it. Children continue to die of vaccine-preventable diseases such as measles.

2. Malnutrition affects nearly half of all children under age five.

3. Anaemia affects the vast majority of pregnant women and teenage girls, stunts children’s growth and is a leading cause of maternal death and babies with low birth weight.

4. Estimates of the number of people in India living with HIV/AIDS range from 2.2 million to 7.6 million. Diarrhoea, often caused by unsafe drinking water or poor sanitation, is the second leading cause of death among children. Access to clean drinking water has improved in recent years, but 122 million households
lack toilets.

5.School enrollment is increasing, but retention and completion rates remain low in part because of the poor quality of the education system, which emphasizes memorization over problem-solving.

6. Women face many forms of gender discrimination. A national preference for male children has led to an increasing gap in gender ratios of children under age six, a trend that may be attributed to female foeticide. Despite a national campaign by the government, birth registration rates are low, especially in the poorest regions.

7. The December 2004 tsunami struck India’s southeast coast and the Andaman and Nicobar islands, killing thousands and causing widespread destruction.


Activities and results for children

1. Thanks to more than a billion doses of polio vaccines and a massive public education campaign, UNICEF and its partners have made significant progress toward wiping out polio.

2. UNICEF helped deliver 49 million doses of vitamin A supplements in 2004, and has partnered with the government to distribute iron and folic acid tablets to teenage girls.

3. To reduce malnutrition and child mortality, UNICEF is raising awareness of the importance of breastfeeding infants.

4. India’s new government reinstated a ban on the sale of non-iodized salt, a move that will combat iodine deficiency.

5.Reducing the spread of HIV/AIDS is an urgent priority. UNICEF has helped train hundreds of health-care teams in preventing mother-to-child transmission.

6. School enrollment has increased over the past decade, and the gender gap in enrollment rates has been dramatically reduced. Literacy rates have improved as well.

7.The government has made school sanitation and hygiene an integral part of its national sanitation and water supply programmes.

பிரச்சினைகளையும், அவற்றிற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் ஒருசேரச் சொல்கின்றன மேலுள்ள குறிப்புகள். இச்சூழலில் ரேணுகா சௌத்ரி முன்வைத்திருக்கும் முக்கியமான பிரச்சினையும் குழந்தைகளுக்கான சரிவிகித உணவின்மையே ஆகும். ஏழைக்குடும்பங்களில் இருந்து படிக்கும் குழந்தைகளுக்கு அரசுப்பள்ளிகளின் சத்துணவுத்திட்டம் பயனளிப்பவை. ஆனால் அது ஒவ்வொருநாளும் சத்துள்ள ஒரு சரிவிகித உணவாக அமையும்
வண்ணம் முறைப்படுத்தப்பட்ட ஒன்றாகத் தெரியவில்லை. வாரத்தில் இரண்டு அல்லது மூன்றுநாட்கள் முட்டைகள் என்றெல்லாம் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவை ஒரு கடைசிக்குடிமகனை வந்து சேருகிறபோது இடையில் பல ஊழல்களையும், தரகர்களையும் தாண்டி நீர்த்துப்போய்ப் பெயருக்கு வந்துசேர்பவையாக உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காய்கறி சிறிதளவு, பால் சிறிதளவு, இறைச்சி, பருப்புவகைகள் என்ற சமச்சீரான
உணவாக இது தற்சமயம் இல்லை. இந்நிலையில் இந்த malnutrition பிரச்சினைக்கு மட்டும் இந்தியாவில் சரியானதொரு திட்டம்தீட்டிச் செயல்படுத்த இப்போது அதற்கு ஒதுக்கப்படுவதைவிடவும் 32 மடங்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்கிறார் ரேணுகா சௌத்ரி.


இவைதவிர சுத்தமான குடிதண்ணீர் மற்றும் கழிவறை போன்ற சுகாதாரப்பிரச்சினைகளும் இன்றுவரை ஒரு சவாலாகவே இருந்துவருகிறது. ஓவொரு பட்ஜெட்டிலும், திட்ட அறிவிப்பிலும் முன்னெடுக்கப்பட்டாலும் அது வேண்டிய பலனை அடையமுடியாவண்ணம் விழிப்புணர்வின்மை, லஞ்சம் போன்ற மிகப்பெரும் முட்டுக்கட்டைகள்
நமக்கு உண்டு. எனக்குத்தெரிந்து ஒரு கிராம ஊராட்சித் தலைவர் நொந்துகொண்ட விடயங்கள் பல. திறந்தவெளிக் கழிப்பு மூலமான சுகாதாரக்கேடைத் தடுத்து நிறுத்த கிராமங்களில் ஊருக்கொரு பொதுக்கழிவறை கட்டிக்கொடுத்தும் அது தண்ணீர் வசதி, சுத்தப்படுத்தும் வசதியின்றிச் சும்மா கிடப்பது, தனிப்பட்ட குடும்பங்கள் கழிவறை கட்டிக்கொள்ள மானியத்துடன் கடன் வழங்கினாலும் அந்தப் பணத்தைப்
பெற்றுக்கொண்டு ஆனால் திட்டத்தைச் செயல்படுத்தாத மக்கள் மனநிலை, அந்தந்த ஊருக்கு என்னென்ன உதவிகள் உண்மையிலேயே தேவைப்படுகின்றன என்பதை ஒரு ஊராட்சித்தலைவரிடம் கேட்டு வரையறுக்காமல் மேல்மட்டத்தில் பொத்தாம்பொதுவாகத் திட்டங்களைத் தீட்டி அனுப்பிவிடுவது என்பன போன்ற பல குறைகளை
ஊராட்சித்தலைவரின் பார்வையில் அறியமுடிகிறது.

ஒரு அரசு எவ்வளவுதான் நல்ல திட்டங்களை எடுத்தாலும், அதைச் சரியாக அதே அக்கறையில் செயல்படுத்தும் அதிகாரிகள், அதைப் பயன்படுத்திக்கொள்ளத்தேவையான மக்கள்¢ன் விழிப்புணர்வு இரண்டும்கூட முக்கியமாகின்றன. இந்த அடிப்படைப்பிரச்சினைகள் தவிர்த்துக் குழந்தைகளுக்கான நல்ல அறிவுமூலங்களை அவர்கள்¢ன் மொழியிலேயே கொடுப்பதும் ஒரு நாகரீக சமூகத்திற்கு அவசியம். குழந்தைகளுக்கான நல்ல
புத்தகங்கள், பதிப்பகங்கள், நூலகங்கள், விளையாடுமிடங்கள், பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்த ஆசிரியர்கள், வகுப்புகளின் பிரிவுகள், பாதுகாப்பு, பாடம் மற்றும் போதிக்கும் முறைகளில் மாற்றம், குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பில் தீவிரம், கட்டாயமாக்கப்பட்ட இலவச அடிப்படைக்கல்வி என்று சிறப்பான செயல்திட்டங்கள் நடமுறைக்குவருவது நம் தேசத்தின் சமூகவளர்ச்சியில் ஒரு மைல்கலாக இருக்கும்.


இப்படியான ஆர்வத்தில் "ஒதுக்கப்பட்ட மூவாயிரத்து சொச்சம் கோடிக்குப்பதிலாகப் பத்தாயிரம் கோடி என் துறைக்கு வேணும், குழந்தைகள் நலனுக்கு நாம் நிறையச் செய்யவேண்டியிருக்கிறது" எனக் கேட்கும் ரேணுகாசௌத்ரியின் கோரிக்கை நியாயமானதே! ஆனால் பெறப்படும் ஒவ்வொரு ரூபாயும் குழந்தைகளின் நலனுக்காக மட்டுமே போய்ச்சேருவதும் முக்கியமானது!

தகவல்களுக்கும், குறிப்புகளுக்கும் நன்றி:-

Times of India
www.unicef.org

4 Comments:

At 4:13 PM, February 26, 2007, Blogger துளசி கோபால் said...

ஆஹா...... நம்ம அமைச்சர்கள் சிலர் உண்மைக்குமே நல்லவர்களாக இருக்கறதி நினைக்கும்போதே மகிழ்ச்சியா இருக்கு.

ரேணுகா செளத்திரிக்கும், இந்த விஷயத்தை இங்கே பதிவிட்டதற்கு உங்களுக்கும்
மனமார்ந்த பாராட்டுக்கள். தூரத்தில் தெரியுது ஜோதி!

 
At 12:42 AM, February 27, 2007, Blogger செல்வநாயகி said...

துளசிம்மா,

அரசு, அமைச்சர் எல்லாம் ஒருபுறம் திட்டங்களைக் கொண்டுவரும் அதே நேரம் தனியார் அமைப்புகள் மூலவும் ஆர்வம் உள்ளவர்கள் சில விடயங்களைக் குழந்தைகளின் பொருட்டு செய்வது சிறப்பாயிருக்கும். அந்த பொம்மைகள் லைப்ரரி பற்றி நீங்கள் எழுதியிருந்தது, இன்னும் சில சின்னச்சின்ன வழிமுறைகள் நம்மாலும் எளிதில் மேற்கொள்ளப்பட முடியக்கூடியவையே. யோசனைகளைக் குறித்துவைத்து முடிகிறபோது செயல்படுத்திவிட வேண்டும்:))

 
At 2:10 AM, August 03, 2007, Blogger K.R.அதியமான் said...

http://nellikkani.blogspot.com/

விலைவாசி ஏன் உயர்கிறது ?

நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.

சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.

மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.

வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.

1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.

ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது.

ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.

அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.

லார்டு கீய்யினஸ் சொன்னது : "..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?

 
At 12:46 AM, August 04, 2007, Blogger செல்வநாயகி said...

அதியமான்,

பயனுள்ள விசயங்களை என் இந்த இடுகைக்குத் தொடர்பாக இருக்குமென்று இங்கு பின்னூட்டமாக இட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி உங்களின் மறுமொழிக்கு.

 

Post a Comment

<< Home