நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, March 07, 2007

சுடரோடு நான்.....நிறைவுப்பகுதி

4. நீங்கள் விட்டு விடுதலையாக உணர்ந்த தருணம் ஒன்று பற்றிச் சொல்ல இயலுமா?. "கருப்பு கவுன்" செல்வநாயகியை மறந்துவிட்டீர்களா? :).

விட்டு விடுதலையாதல் என்பதை நாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறுவதையே சொல்ல முடியாதென நினைக்கிறேன். ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் அந்தக்கணத்தை மட்டுமே அனுபவித்துக்கொண்டு மற்றவற்றை விட்டு விடுதலையாகி இருத்தலே உண்மையான சிட்டுக்குருவியைப்போலே விட்டு விடுதலையாதல்:))

கருப்பு கவுன் செல்வநாயகியை மறக்கவில்லை. மறக்கவும் முடியாது. ஏனென்றால் அதன் அனுபவம் அதோடு மட்டும் முடிந்துவிட்ட ஒன்றல்ல. சட்டம் முடித்து பார்கவுன்சில் பதிவு முடித்த அன்று அதன் தலைவர் எங்களுக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லி உரையாற்றினார். அதில் அவர் சொன்னது, "வழக்கறிஞராய் வாழ்வைத் துவங்கும் நீங்கள் வழக்கறிஞராகவே தொடராமல் போகலாம். ஆனால் இதில் நீங்கள் பெறும் அனுபவம் வாழ்க்கை முழுதும் தொடர்ந்துவரும்" என்பது. அது என்னளவில் உண்மை. அறிமுகமான, ஆகாத மனிதர்களை அணுகுவதிலிருந்து, சொந்தக்காரர்கள் ஒரு பிரச்சினை என்றால் உடனே சில யோசனைகள் சொல்லக் கிளம்பிவிடுவது வரை எனக்கு அது உதவியானது. இப்போது முழுக்க வேறு துறையில் பணிபுரிந்தாலும் அதன் பாடங்கள் இதிலும் உதவுகின்றன. இங்கு திடீரென ஏதாவது வழக்குகளைச் சந்திக்க நேரும் நண்பர்களுக்கு முடிந்த உதவிகளை, ஆலோசனைகளை வழங்கும்போதெல்லாம் அங்கு கருப்பு கவுன் செல்வநாயகி இருக்கிறாள்:)) விடுமுறையில் ஊருக்குப் போனாலும் அருகிலிருக்கும் யராவது சொத்து வாங்கினால் பத்திரங்கள் சரியாக இருக்கிறதா எனப் பார்க்கவும், தீர்ப்பான பணம் வரவேயில்லை எதனாலாக இருக்கும்? எனக் கேட்டுக்கொள்ளவும் வருவதும் நேரும்:))

அப்பாடாஆஆஆஆ.........ஒருவழியா நம்ம புராணம் முடிஞ்சது. ஆனா சுடரையும் தொடரா எழுதி நான் சாதனை படைத்த இந்த நிகழ்வை நம் வலை நண்பர்கள் மூன்று பேர் விமர்சனம் செய்தா எப்படியிருக்கும்னு சும்மா ஒரு கற்பனை இங்கு:-

நண்பர் 1: ஏப்பா இந்த சுடர் சுடர்னு ஒன்னு சுத்திச் சுத்தி வருமே அது இப்ப யார்கிட்ட இருக்கு?

நண்பர் 2: அதுவா? ஒவ்வொரு பின்னூட்டத்தையும் மூணு , நாலு பகுதியாப் பிரிச்சுத் தொடர் எழுதிக்கிட்டே இருக்குமே ஒரு பொண்ணு அதும்பட கையில இருக்கு. இப்பத்தான் ஆடி முடிச்சு நின்னுக்கிட்டிருக்கு சுடரோட.

நண்பர்3: யப்பா....அந்தக் கதையக் கேக்காதீங்கப்பு, சுடர வாங்குனாலு வாங்குச்சுப் பின்னத் திருப்பி வாங்கறதுக்குத் தலையால தண்ணி குடிக்க வேண்டியதாப் போச்சு. ஒரு கேள்விக்குப் பதில ஆரம்பிச்சுதுன்னா
முடிக்கறக்குள்ள நாம ரெண்டு மீட்டிங் முடிச்சுரலாம். அப்படியே ஒவ்வொரு கேள்விக்கும் ஆரம்பிக்கையில நாம கிளையண்ட் மீட்டிங் போனா அது இன்னொரு கேள்வியப் பேசும்போது நாம கிளையண்டோட சாபிட்டுட்டே வந்தரலாம்.

நண்பர்1: இதக்கேட்டா எனக்கு ஒன்னு ஞாபகம் வருது. எங்கூர்ல கோயில் விசேசத்துல எல்லாரும் காவடி எடுத்துக்கிட்டுப் போவாங்க. இராத்திரி வினாயகர் கோயில்ல இருந்து முனியப்பச்சி கோயிலுக்குப் போவையில இருட்டுக்கு தீப்பந்தம் புடிச்சுக்கிட்டு முன்னாடி ஒரு ஆள் போய்க்கிட்டு இருப்பாரு. கூட்டத்துல இருந்து சாமிவந்து ஆடும் ஒரு ஆளு கீழே மண்டிபோட்டு உக்காந்துடுவாரு. வெளிச்சம் தெரியட்டும்னு தீப்பந்த ஆளு அவருக்குப் பக்கத்துல வந்து நிப்பாரு. அமைதியா உக்காந்துக்கிட்டு இருந்துட்டுத் தீடீர்னு எந்திரிக்கிற சாமி ஏமாந்தாப்புல நின்னுக்கிட்டிருக்கற அந்தத் தீப்பந்த ஆளுகிட்ட இருந்து அதப் படார்னு புடுங்கீரும். அதும் ஒரு சுடர் மாதிரித்தேன்னு சொல்லலாம். ஆனாக் கொஞ்சம் பெரிசா எரியும். அதைவாங்கீட்டு சுத்திச் சுத்தி ஓடி ஆடும்பாரு சாமீஈஈஈ... எல்லாருக்கும் பயமாப் போயிரும். சாமி கிட்ட வரும்போது தீப்பந்தம் மேல பட்டுரும்னு தள்ளித் தள்ளி நிப்பாங்க. சில தைரியமான ஆளுக கிட்டப்போயி சாமி கையில இருந்து புடுங்கப் பாப்பாங்க. ஆனா முடியாது. அப்படி இறுக்கிப் புடிச்சிக்கும். அப்பறம் ஏண்டா நீ குடுத்தேன்னு தீப்பந்த ஆளத் திட்டுவாங்க.

நண்பர் 2 : ஆமா இத எதுக்கு இப்ப நீ சொல்லிக்கிட்டிருக்கிற?

நண்பர் 1: இல்ல, அந்தச் சாமிகையிலிருந்து தீப்பந்தத்த வாங்கற மாதிரி இந்தச் செல்வநாயகி கையில இருந்து சுடர வாங்கறது பெரும்பாடா இருக்குமாட்டத் தெரியுது. கேள்வி கேட்டா சட்டுப்புட்டுனு ரெண்டு வரியில பதில்சொல்லாம நீட்டி முழக்கி வதைச்சிக்கிட்டு இருக்கு.

நண்பர் 3: இதச் சொல்லக்கூடாது, இதும்பட கையில சுடரக்கொடுத்த அப்பிடிப்போடுவச் சொல்லணும்.

நண்பர் 1: ஆமா அந்த அப்பிடிப்போடு கையில யாரு கொடுத்தா?

நண்பர் 2: அது வேற யாரு அந்த மதி கந்தசாமியோட வேலை.

நண்பர் 3: அந்தக் கந்தசாமி கைக்குப் போனா இப்பிடித்தேம்பா ஆவும். இத அறியாமக் கொடுத்த ஆசாமி யாரோ?

நண்பர் 2: வேற யாரு? நம்ம கவிஞர் பாலபாரதிதான்.

நண்பர் 1: சரியாப் புடிச்சப்பா ஆளக் கையுங் களவுமா. அந்தக் கவிஞரால வந்ததுதான் இத்தனையும். எப்பவுமே இப்படி எதாவது ஏக்குமாக்காப் பண்றதே வேலையாப் போச்சு அவருக்கு. அவரச் சாத்தறதுதான் இதுக்கெல்லாம் ஒரே ஆறுதல், வாங்க போலாம் விடுபட்ட இடத்துக்கு.

ஏற்கனவே வரவனையான் செந்திலிடம் கேசரியாகிப் பொங்கலாகி விட்ட பாலபாரதி இன்று இந்த மூன்று பேரால் சட்டினி ஆகப் போவதை வருத்தத்துடன் ச்சே மகிழ்ச்சியுடன் நினைத்துக்கொண்டு இதுதான் சமயம் என்று சுடரை நான் முத்துலட்சுமிக்குக் கொடுக்கிறேன். அவருக்கான கேள்விகள்:

1. உங்க பள்ளிக்கூட வாழ்க்கை பத்தி சொல்லுங்க. வகுப்புல எப்பவும் பேசிக்கிட்டே இருப்பீங்களா? (அடிக்க வராதீங்க:))

2. காதல் --- திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் --- சிறுகுறிப்பு வரைக.

3. டில்லி பத்திக் கொஞ்சம் எடுத்து உடுங்க. முக்கியமா உங்கள அன்போட தன் தோட்டத்துச் செடிகளைப் பாக்க வரும்படி பின்னூட்டத்துல சொல்லியிருந்த அப்துல் கலாம் பற்றி?

4. ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி பத்தி உங்களுக்குத் தெரிஞ்ச தகவல்கள் சொல்லுங்க?

5. இப்போ இந்தியாவின் முக்கியமான பிரச்சினை என்ன? அதை எப்படிக் களையலாம்?

18 Comments:

At 10:56 AM, March 07, 2007, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

களத்துல நான்???.வேடிக்கைப் பார்க்கவந்த வடிவேலு கணக்கா உள்ள என்னை புடிச்சு போட்டுட்டீங்க... ,
திருவிழாவை வேடிக்க பாக்கவந்தா யானை மாலை போட்டு மேடை ஏத்திவிட்டா எப்படி இருக்கும் அப்படி இருக்கு எனக்கு. முதல்ல உங்களுது படிச்சு முடிச்சுட்டு ஆரம்பிக்கறேன்.

 
At 11:29 AM, March 07, 2007, Blogger VSK said...

அப்படீன்னா, நீங்க இப்போதைக்கு எழுதினாப்பலதான், முத்துலட்சுமி அவர்களே!

எப்ப நீங்க இத்தையெல்லாம் படிச்சு முடிச்சு, எத்தை உள்வாங்கி, எப்ப உங்க கேள்விகளைப் புரிஞ்சிகிட்டு, எப்ப உங்க சுடர் ஏத்தறது!

ம்ஹூம் .....எனக்கு நம்பிக்கையில்லை!

மக்களே! ஒரு, ஒருவாரம் கழிச்சு வந்து பாருங்க.... அடுத்த சுடர் வந்திரிச்சான்னு!
:))

சும்மா, ஒரு விளையாட்டுக்குச் சொன்னேன், திருமதி. செல்வநாயகி!

ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து அழுத்தமாக எரியவிட்டிருக்கிறீர்கள் சுடரை!

 
At 2:45 PM, March 07, 2007, Blogger மலைநாடான் said...

அருமை!

 
At 2:54 PM, March 07, 2007, Blogger செல்வநாயகி said...

முத்துலட்சுமி,

யானை சரியான ஆள்பாத்துத் தான் மாலை போடும். அப்ப என்னைய யானைன்னு சொல்லீட்டிங்க, இருக்கு உங்களுக்கு:)) ஒன்னுமில்லை டில்லிக்கு வந்தா ஒரு பருப்பி செஞ்சு குடுத்துருங்க:))

எஸ்கே,
///சும்மா, ஒரு விளையாட்டுக்குச் சொன்னேன், திருமதி. செல்வநாயகி///

நீங்கள் இதைச் சொல்லாவிட்டாலும் நான் புரிந்துகொள்வேன் எந்த எண்ணத்தில் சொல்லியிருப்பீர்கள் என்று:))
உண்மையில் உங்கள் பின்னூட்டத்தை மிக ரசித்தேன். எப்பவும் சீரியஸா எதையாவது பேசிக்கிட்டு....இதுல கொஞ்சம் சிரிச்சுக்கொண்டிருக்கலாம். உங்களிடமும் இயல்பான நகைச்சுவை மிளிர்வதை அங்கங்கு கண்டு ரசித்திருக்கிறேன். எனக்கு அவ்வளவாக நகைச்சுவை வராதெனினும் ரசிப்பதில் விருப்பம் அதிகம்.

சாரா,
இந்தச் சாமியாட்டமெல்லாம் பாத்து ரொம்பநாளான மாதிரி இருக்கு. இன்னிக்கு ஏனோ ஞாபகம் வந்துருச்சு, அதான் அந்த வசனங்கள்:))

வருகைக்கு அனைவர்க்கும் நன்றி.

 
At 2:54 PM, March 07, 2007, Blogger இளங்கோ-டிசே said...

நன்று.

 
At 4:47 PM, March 07, 2007, Blogger செல்வநாயகி said...

மலைநாடான், டிசே

வருகைக்கு நன்றி.

 
At 8:17 PM, March 07, 2007, Blogger மங்கை said...

ஆஹா

அடுத்து நம்ம அம்மிணியா...

தில்லியில இருக்கோங்கிறதுக்காக இப்படியெல்லாம் கேள்வி கேக்றதா..ம்ம்ம்

செல்வநாயகி..இப்ப தான் எல்லா பாகமும் படிச்சு முடிச்சேன்...கை ரிப்பேரா இருந்தாலும் இத சொல்லியே ஆகனும்னு டைப் பண்றேன்..அருமை
வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்..

 
At 9:32 PM, March 07, 2007, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\SK said...
அப்படீன்னா, நீங்க இப்போதைக்கு எழுதினாப்பலதான், முத்துலட்சுமி அவர்களே//

நானெல்லாம் குண்டு குண்டு நாவலையே ஒரு மூச்சில் படிக்கறவளாக்கும். எழுதிட்டேன் என் சுடரை சில தவறு இருந்தா திருத்தம்
செய்திட்டு போட்டுடறேன்.
செல்வா அப்படியே ஒரு சுழலுக்கு மாட்டுனா மாதிரி படிச்சு முடிச்சுட்டேன்.நல்லாருக்கு உங்களோடது.

 
At 9:47 PM, March 07, 2007, Blogger தமிழ்நதி said...

இன்று மகளிர் தினம் அருமையான எழுத்துக்களுடன் ஆரம்பித்தது. நான்கு பகுதிகளையும் ஒரேயடியாக வாசித்து முடித்தேன். வியந்தேன். அடுத்தது முத்துலட்சுமியா... போட்டுத் தாக்குங்க. பெண்கள்தான் வெளிச்சம் கொடுப்பவர்கள் இல்லையா... அதானே சுடர் அவங்க கைலயே சுழலுது...:))

 
At 10:30 PM, March 07, 2007, Blogger Jayaprakash Sampath said...

சுடரும், சுடரைப் பற்றிய கற்பனையான விமர்சனமும் பிரமாதம்.

 
At 11:06 PM, March 07, 2007, Blogger லக்கிலுக் said...

சுடர் மகளிர் அணி பக்கமே சுத்திக்கிட்டிருக்கே?

நாங்க என்னக்கா பாவம் பண்ணோம்? :-)))))

 
At 12:03 AM, March 08, 2007, Blogger - யெஸ்.பாலபாரதி said...

ஸ்ஸ்ஸ்.. அப்பாடா... ஒருவழியா முடிச்சுட்டீங்களா...? எங்கே சுடரை அதன் கடைசி நாளான ஏப்14வரைக்கும் நீங்களே வச்சு.. தொடர் எழுதிடுவிங்களோன்னு பயந்துட்டேன்.

சந்திரமதிகிட்ட போனாலும் உங்க கைக்கு அவர்கள் மூலமே வந்துடும்னு நெனைச்சேன். அப்படியே ஆகிடுச்சு.
(என்னைய தேடி ஆட்டோ அனுப்பி இருக்குறது உங்க சொந்த செலவா? அல்லது சந்திரமதி+ கற்பகமும் கூட்டா?)


//சுடர் மகளிர் அணி பக்கமே சுத்திக்கிட்டிருக்கே?

நாங்க என்னக்கா பாவம் பண்ணோம்? :-)))))//

ஏலேய் தம்பி.., இவங்க மூணாவது ஆள் தான். இன்னும் மிச்சமிருப்பவர்களிடமும் ஏப்14க்குள் வேகமாக சுத்திட்டே நம்ம ஆளுங்க கிட்டவரட்டும்.

 
At 12:03 AM, March 08, 2007, Blogger பொன்ஸ்~~Poorna said...

நாலு கேள்விக்கு, நாலு பதிவா!!!! அம்மாடி.. இதுல நாலு பேரு விமர்சனம் வேற நீங்களே போட்டுட்டீங்க! நாங்க சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லாம பண்ணிட்டீங்களே :)

விஸ்கான்ஸின் மாநில பா.க.ச அணித்தலைவிக்கு ஒரு ஓ! :)

 
At 12:23 AM, March 08, 2007, Blogger - யெஸ்.பாலபாரதி said...

/விஸ்கான்ஸின் மாநில பா.க.ச அணித்தலைவிக்கு ஒரு ஓ! :)//

ஆஹா... இது வேறயா... ஆத்தா நீங்களுமா? :(

"$யாரைத்தான் நம்புவதோ..மேதை(!) நெஞ்சம்..$" ;)

 
At 12:33 AM, March 08, 2007, Anonymous Anonymous said...

ஆஹா,
முன்னுதாரணமான மகளீர் நீங்க :-)
'பொம்பளைங்கன்னா சும்மாவா?'ன்னு நிருப்பிச்சிட்டீங்க :-)

இனி உங்களைப் பார்த்து சுடரை எட்டு பதிவாப் போடாம இருக்க கடவுள் துணை புரியட்டும் :-)

சாத்தான்குளத்தான்

 
At 12:54 AM, March 08, 2007, Blogger தருமி said...

// எனக்கு அவ்வளவாக நகைச்சுவை வராதெனினும் ...//
ஆமாங்க .. உங்களுக்கு நகைச்சுவை சுட்டுப் போட்டாலும் வராதுன்றது அந்த 3 நண்பர்களின் விமர்சனத்தைப் பார்த்தாலே புரிஞ்சிருதே .. !

 
At 2:21 AM, March 08, 2007, Blogger செல்வநாயகி said...

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே அனைவர்க்கும்.

மங்கை,
கை என்னாச்சு? இப்ப சுடர் உங்ககிட்ட வந்ததுனால இன்னும் நிறையத் தட்டச்ச வேண்டியிருக்குமே:(( கை சீக்கிரம் குணமடையட்டும்!

முத்துலட்சுமி,
//நானெல்லாம் குண்டு குண்டு நாவலையே ஒரு மூச்சில் படிக்கறவளாக்கும்.///

அதானே:)) அந்தச் சுறுசுறுப்பை அப்படியே இங்க கொஞ்சம் அனுப்பியுடுங்க எனக்கு:))

தமிழ்நதி,
வாங்க. உங்க நட்சத்திரவாரத்தை ஆர்வத்துடன் வாசிக்க ஆரம்பித்துச் சில இடுகைகளோடு நிற்கிறது. அதுக்குள்ள இந்தச் சுடர் வேலை வந்துவிட்டது. இனித் தொடரவேண்டும் அந்த வாசிப்பை.

ஐகாரஸ் பிரகாஷ்,
உங்களுக்குத் தட்டிய மடல் ஒன்று மின்னஞ்சல் முகவரி கிடைக்காமல் அனுப்பப்படாமல் என்னிடமே உள்ளது. நீங்கள் இப்பின்னூட்டத்தை வாசித்தால் ஒருவரி இடுவீர்களா?

 
At 2:43 AM, March 08, 2007, Blogger செல்வநாயகி said...

லக்கிலுக்,
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்னு சட்டம்போட்ட உங்க தலைவர்கிட்டப் போய் "அப்பறம் பெண்கள் மட்டும் ஏன் ஆகக்கூடாது" ன்னு நீங்க ஏன் கேள்வி கேக்கலை? அதான்:))

பாலபாரதி,

///எங்கே சுடரை அதன் கடைசி நாளான ஏப்14வரைக்கும் நீங்களே வச்சு.. தொடர் எழுதிடுவிங்களோன்னு பயந்துட்டேன்///

:)))

ஆட்டோ அனுப்புனதுல கூட்டணி பற்றியெல்லாம் சொல்லமாட்டோம். ரகசியம்:))

///ஆத்தா நீங்களுமா? ///

நான் இதிலெல்லாம் இல்லை. நீங்கள் கவலைப்படவேண்டாம்:))

பொன்ஸ்,

///ஏலேய் தம்பி.., இவங்க மூணாவது ஆள் தான். இன்னும் மிச்சமிருப்பவர்களிடமும் ஏப்14க்குள் வேகமாக சுத்திட்டே நம்ம ஆளுங்க கிட்டவரட்டும்///

இப்படி சொல்ற ஒரு நல்ல மனிதருக்கு எதிராவா? நம்மால முடியாதுப்பா:))

ஆசிப் அண்ணாச்சி,

//இனி உங்களைப் பார்த்து சுடரை எட்டு பதிவாப் போடாம இருக்க கடவுள் துணை புரியட்டும் :-)///

வாங்க வாங்க. வரவர உங்க அலும்புக்கு ஒரு அளவில்லாமப் போயிக்கிட்டிருக்கு. வலைப்பதிவர் மூணுபேரு போன வைரமுத்து கூட்டத்தை "வலைப்பதிவர் மாநாட்டுக்கு வைரமுத்து வந்தார்" னு எழுதறது, "அருமையா எழுதுற நீரு எதுக்குவே போட்டோவெல்லாம் போட்டுக் கூட்டத்தக் கூட்டிக்கிட்டிருக்கீரு" ன்னு ஒரு அக்கறையோட கவிஞர் பிரசன்னா வந்து சொன்னா "சரிதான் வேலையப் பாத்துக்கிட்டுப் போவே" ன்னு அவரை எடுத்தெறிஞ்சு பேசறதுன்னு இருக்கற நீரு நல்லா இரும்வே:))

தருமி,
//ஆமாங்க .. உங்களுக்கு நகைச்சுவை சுட்டுப் போட்டாலும் வராதுன்றது அந்த 3 நண்பர்களின் விமர்சனத்தைப் பார்த்தாலே புரிஞ்சிருதே .. ! ///

:)))

 

Post a Comment

<< Home