நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, August 03, 2007

நர்மதா பேசினாள்

செத்துப்போனவர்கள் கனவில் வருவது இது முதல்முறை அல்ல
பலமுறை நடந்தாகிவிட்டது
மென்காற்றில் ஒரு இலை அசைவாய்
தலைகாட்டும்போதே சிலர் கலைந்துபோனார்கள் கனவோடு சேர்ந்து

கொட்டப்படும் கூழாங்கற்களாய் நான் மொழிகொண்டலைந்தபோதும்
தம்மில் அலையடிக்காமல் மௌனமாய் என் கனவில்
வெறுமனே வந்துபோனார்கள் இன்னும் சிலர்

ஆனால் நான் நடந்துபழகிய
என் பன்னிரெண்டாம் மாத வயசில் செத்துப்போன அப்பச்சி அப்படியல்ல
அவர் ஆசையாய்ப்போடும் வெத்தலையை மடித்து
அவருக்கு வாய்க்குள் திணிப்பேன் என்னுடைய அவ்வயதிலென
அம்மாயி சொன்ன கதைமூலம் மட்டுமே அவரை அறிவேனென்றாலும்
அப்பச்சி கனவில் வரும்போது பேசியிருக்கிறார்
"உங்கம்மாவையெல்லாம் படிக்கவெக்காமப் போயிட்டேன்
ஆனாலும் உன்னை அவ படிக்கவெச்சுட்டா மவராசி" என்றார்
நானோ என் சம்பாரிக்கும் பணத்திலுங்களுக்கு என்ன வேண்டுமென்றேன்
"பல்லு உளுந்துருச்சு, வெத்தலையைக் கடிக்கமுடியறதில்லை
அதைக் கொட்டிப்போட ஒரு கொட்ரா வாங்கித்தா போதும்"
எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அப்பச்சிக்குப் பிறகு
இன்று கனவில் வந்த நர்மதாதான் பேசியிருக்கிறாள்
துறுதுறுவெனப் பார்ப்பதும் இரட்டைச்சடைகளை ஆட்டுவதும்
கொஞ்சம் மணலையள்ளித் தன் பாவாடையில்போட்டுப்பின்
அதைக் கீழேகொட்டி விளையாடுவதுமாயிருந்த நர்மதாவிடம்
நாந்தான் பேச்சைத் தொடங்கினேன்
அவளுக்கு ஊரெதுவெனக்கேட்டு
"ஒரிசாவின் ஓரமாய் ஒரு கிணறுதான் என் ஊர்
பாலீத்தீன் பைகளில் சுற்றி எறியப்பட்டவள்"
எனும்போது அவள் விளையாட்டுக்களை நிறுத்தியிருந்தாள்

சிசுவாய் இறந்துபோனவள் கனவில் வளர்ந்துவிட்டாள்
அவள் ஊர் கேட்டவுடன் சேர்த்தணைத்துக்கொண்டேன்
வறண்ட தொண்டையை ஈரமாக்கச் சிரமப்பட்டுச் சேர்த்துக்கூட்டிய
எச்சிலைவிழுங்கிக்கொண்டே ஏதாவது பேசவேண்டுமென
"நீ பிறந்திருந்தால் என்ன செய்திருப்பாய்" என்று கேட்டுவைத்தேன்
"இருக்கும் இராமாயணத்தைக் கடலில் எறிந்துவிட்டுப்
புதிய இராமாயணம் எழுதியிருப்பேன்" என்றாள்
பிறகென்ன நினைத்தாளோ
"அதில் தன்னை நிரூபிக்கத் தீக்குளிக்கச்சொன்ன கடவுளை
தீயிலிட்டுப்பொசுக்கிவிட்டு வாழ்வாள் ஒரு மனுசி" என்றும் சொன்னாள்

நர்மதா கொலையில்
செத்துப்போனது
நர்மதா மட்டுமல்ல

பின்குறிப்பு:-

இதோடு தொடர்புடைய இடுகை முந்தைய "உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா"

16 Comments:

At 4:09 AM, August 03, 2007, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்...நர்மதா சொன்னபடி செய்திருப்பாள் பிறந்திருந்தால்...
:(

At 8:04 AM, August 03, 2007, Blogger Unknown said...

ஒரிஸ்ஸா சம்பவம் உங்களை மிகவும்
பாதித்திருப்பதை உணரமுடிகிறது.
இருந்தாலும்,அப்பச்சியும்,அம்மாயியும்
தான் இயல்பாக உள்ளது.

At 8:56 AM, August 03, 2007, Blogger Balaji-Paari said...

நம்மை செயலிழக்க செய்யும் சம்பவங்கள், குறிப்பாக இழப்புகள் கனவில் தோன்றுவது, அவர்களுடன் நாம் பேசுவது, இவையெல்லாம் அவர்கள் மிகவும் ஆழமாக நமக்குள் இருக்கின்றார்கள் என்று உணர்த்துவதாகவே புரிந்து கொள்கின்றேன்.
ஒரிஸ்ஸா சம்பவம் படித்து பதறிய மனது. அச்சம்பவம் இவ்வளவு தூரம் தங்களை ஆட்கொண்டது இயல்பே (இதுவரை உங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதால் சொல்கின்றேன்).
இத்தகைய சம்பவங்கள் சமூகத்தின் தற்போதைய நிலைகளயே கூறுகின்றது.
அதன் கட்டமைப்பை ஆழ்ந்து நோக்க வைக்கின்றது. இதில் பெண் என்பதை பொருளாதாரக் குறியீடாக பார்க்கப்படும் தன்மை, இக்குறியீட்டை கட்டிக் காக்கும் நிறுவனங்களாக மதங்கள், மதங்களின் வேராக இருக்கும் ஆணாதிக்கம், இவைகளால் கட்டுபடுத்தப்படும் இன்றைய நடைமுறை அரசியல், என தெளிவாக பின்னப்பட்ட வலை நம்மை சுற்றி இருக்கின்றது.
இத்தகைய சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

At 12:28 AM, August 04, 2007, Blogger செல்வநாயகி said...

முத்து, தாமோதர் சந்துரு, பாலாஜி, நன்றி.

சந்துரு,

ஒரு கவிதை எழுதவேண்டுமெனத் திட்டமிட்டு அதற்குரிய அழகியலோடு நான் எழுத எத்தனிப்பவை சில. அவையும்கூட முழுமையாக வந்துவிடுவதில்லை எனக்குப் பலநேரம்.

இக்குறிப்பிட்ட கவிதை நேற்று இரவு நெடுநேரம் ஒரிசா சம்பவம் பற்றிய செய்திகளைப் பல இடங்களிலும் படித்துமுடித்தபோது பாரமான மனதிலிருந்து சில உணர்வுகளையாவது இறக்கி வெளியேற்றிக்கொள்ள எழுதினேன் இதை. இதில் சொல், வாக்கிய, அழகியல் கட்டுமானங்கள் இருக்கமுடியாமல் போயிருக்கலாம். ஆனாலும் நான் இதைக் கவிதை என்று வகைப்படுத்திவிட்டபிறகு அதை விமர்சிக்க வாசிக்கும் உங்களுக்கு
உரிமை உண்டு.

பாலாஜி,
உங்கள் எழுத்துக்களை ஆர்வமுடன் வாசித்துக்கொண்டிருந்த காலம் உண்டு. இப்போது நீங்கள் அதிகம் எழுதுவதில்லையென நினைக்கிறேன். இருப்பினும் வலைப்பதிவுகளுக்கு வந்துபோய்க்கொண்டுதானிருக்கிறீர்கள் என்பது ஆறுதல். உங்களின் புரிதலுக்கு நன்றி. நீங்கள் சொன்னதுபோல் நானும் இதன் பின்னணியில் நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன். இன்னும் நம் நாடு இருக்கும் நிலையையும், நம் வலைப்பதிவுகள் பயணிக்கும் திசையையும்கூட ஒப்பிட்டுக்கொண்டேன்.

ரவிக்குமாரின் கட்டுரையையும் நீங்கள் நிச்சயம் படித்திருப்பீர்கள். அதில் இதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம்கூட ஒன்பது ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்திருக்கிறது என ரேணுகா சௌத்ரி சொல்லியிருப்பதைப் பாருங்கள்:-

"மாநில அளவில் ஆலோசனைக் குழுக்களை உருவாக் கவும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்களில் செய்யப்படும் பாலின நிர்ணய சோதனைகள் பற்றிய விவரங்களை இரண்டு ஆண்டுகள் வரை அழிக்காமல் வைத்திருக்க ஆணை யிடவும், அப்போது தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அவை சரிவர நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய அரசு இயற்றிய சட்டம் அமலுக்கு வந்து ஒன்பது ஆண்டுகளான பிறகும் அந்த சட்டத்தின் கீழ் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என தெரிவித்தார். அந்த சட்டத்தின்கீழ் மார்ச் 2005 வரை நாடெங்கும் 303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், எவரும் தண்டிக்கப்படவில்லை

2006 மார்ச் மாதத்தில்தான் ஹரியானா மாநிலத்தில் நாட்டிலேயே முதன்முறையாக ஒரு டாக்டரும் அவரது உதவியாளரும் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டனர். இரண்டு வருட சிறைத் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் அவர்களுக்கு விதிக்கப்பட்டன"

கீழ்வரும் பத்திகள் பேசுவது மேலும் கொடுமையாக உள்ளது:-

"நடைமுறை ரீதியான இத்தகைய சிக்கல்கள் ஒருபுற மென்றால், அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் இன்னொரு புறம் பெரிய சவாலாக இருக்கிறது. கரு நன்கு வளர்ச்சியடைந்த பிறகே அது பெண்ணா, ஆணா என்று பார்க்க முடியும் என்ற நிலை இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. ஆனால், இப்போதோ மிக ஆரம்ப கட்டத்திலேயேகூட அதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். பாலினத்தை நிர்ணயிக்கும் இந்தப் பரிசோதனை முறையில் இப்போது மேலும் ஒரு ‘முன்னேற்றம்’ ஏற்பட்டிருக்கிறது. கருவுற்ற பெண்ணின் ரத்தத்திலிருந்து கருவின் அணுவைப் பிரித்தெடுத்து அதைக்கொண்டு அந்தக் கருவில் இருப்பது பெண்ணா&ஆணா என்று கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தமுறை புழக்கத்துக்கு வந்தால், பெண் சிசுக் கொலையைத் தடுப்பது மேலும் சிக்கலானதாகி விடும்.

பெண் சிசுக்கொலையைத் தடுப்பதற்கென தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டத்தை பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் இந்தியாவெங்கும் நடைமுறைப்படுத்தப்போவதாக அமைச்சர் ரேணுகா சவுத்ரி கூறியுள்ளார். ஆனால், ‘‘பெண் சிசுக்கள் பெரும்பாலும் கருவிலேயே அழிக்கப்பட்டு விடுகின்றன. எனவே, தொட்டில் குழந்தை திட்டம் அதைத் தடுப்பதற்கு பெரிய அளவில் உதவிடாது’’ என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. "

At 12:38 AM, August 04, 2007, Blogger செல்வநாயகி said...

At 6:35 AM, August 04, 2007, Blogger பத்மா அர்விந்த் said...

செல்வநாயகி
இது போல முன்பொருமுறை நிறைய குழந்தைகளின் எழ்லும்புகளை தமிழகத்திலும் கண்டெடுத்து எல்லாரும் பேசி தீர்த்தாகிவிட்டது. பேசுவது மட்டுமே நம் அமைச்சர்களால் முடிந்த கலை. இவற்றிற்கெல்லாம் ஒரு முனை காரணங்கள் இல்லை. பன்முனை காரணங்கள் கொண்ட இந்த செயலூக்கு ஒருவகையில் எல்லோருமே, பெண்கள் முதல் காரணம். பெண்களுக்கும் இது போன்ற செயல்களில் முக்கிய பங்குண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ளவே வேண்டும். இது பெண்ணின் செயல்பாடிற்ற நிலை (helpless situation) என்பதை காரணம் காட்டி வேண்டுமானால் பேசலாம். இதுகுறித்தும் இது போன்ற பெண்களுக்கான பல செயல்பாடுகள் குறீத்தும் என் எண்ணங்கள் இந்த சுட்டியில்http://reallogic.org/thenthuli/?p=114. ஒரிசா பிரச்சினை குறித்து நானும் பலவாறாக யோசித்துக்கொண்டிருக்கிறேன். படிப்பும் விழிப்புணர்வும் இந்த நிலைப்பாடை மாற்றும் என்று நம்பிக்கொண்டிரு(ந்திரு)க்கிறேன். ஆனால் சமீபத்தில் காணும் சில நிகழ்வுகள் இந்த நம்பிக்கையையும் கேள்வி கேட்க வைக்கின்றன.சந்தேகப்பட்ட இராமனை மட்டும் இன்றி, கணவனே தெய்வம் என்று நம்பி, அவனுக்காக நெருப்பில்குளித்த, குளிக்கிற பெண்களும் இருக்கும் வரை, சந்தேகம் தீர வாய்ப்பே இல்லை அல்லவா?

At 3:12 PM, August 04, 2007, Blogger Thangamani said...

சாதி, பெண்ணடிமைத்தனம் (அது ஆண் அல்லது பெண் யாரால் முன்னெடுக்கப்பட்டாலும்)இரண்டும் ஒழியவேண்டுமெனில் இன்றுவரை இந்திய ஆழ்மனதில் ஊருறுவிப் பாய்ந்திருக்கும் ஆயிரமாயிரமாண்டு கால சனாதன அழுக்கு அழிக்கப்படாத வரை சாத்தியமில்லை. கட்டுப்படுத்தப்பட்ட ஒரு கலாச்சாரப் புரட்சி போன்ற ஒன்றின்பேரில் எந்த வித நியாயப்படுத்தல்களுக்கும் இடமின்றி அந்த விழுமியங்கள் ஒரு போர்க்கால அடிப்படையில் அழிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் இன்னும் ஆயிரக்கணக்கான உயிர்களை, வாழ்க்கையை இழந்தவாறே இருப்போம். இதையோட்டியே பெரியார் சுதந்திர இந்தியா மதங்களை தடைசெய்ய வேண்டும் என்றார். ஆனால் இன்னும் நீதியமைப்பு தொடங்கி, எல்லா சமூக, தனிமனித தளங்களிலும் மத விழுமியங்களே ஆட்சி செய்கின்றன.

மனித உரிமை, அறிவியல் முன்னேற்றம் போன்றவைகள் இன்றைய அய்ரோப்பாவில் சாத்தியமானது கிறிஸ்த்துவ மதநீக்கம் செய்யப்பட்டதால் தான்.

At 1:35 AM, August 05, 2007, Blogger  வல்லிசிம்ஹன் said...

selvanayaki,
we feel so lost after reading any kind of news like this.

ithoda vithai innumm azikkap padavillai. adhu irukkum varai maranggaLaiyum verkaLaiyum nonthu enna payan.:((
sorry for the comment in english.

At 2:17 PM, August 05, 2007, Blogger Balaji-Paari said...

தொடரும் வன்முறைகள்...
http://muslimpage.blogspot.com/2007/08/blog-post_04.html

At 6:03 PM, August 05, 2007, Blogger துளசி கோபால் said...

(-:

At 12:20 AM, August 06, 2007, Blogger செல்வநாயகி said...

வருகைக்கு நன்றி நண்பர்களே.

பாலாஜி,
அந்த சுட்டிக்கு நன்றி. வேலூர் மாவட்டத்தில் பெண்சிசுக்கொலை இவ்வளவுதூரம் இப்போதும் வளர்ந்துவருகிறது என்பதை அவ்விடுகையில் அறிந்தேன்.

தங்கமணி,

இந்தமாதிரி நிகழ்வுகளுக்கு "ஏன் இப்படியெல்லாம் நடக்கவேண்டும்?" என வெறும் உச்சுக்கொட்டி முடித்துக்கொண்டிருந்த காலகட்டம் எனக்கும் உண்டு. இப்போது இதன் வேர்களையும், விதைகளையும் அவை எங்கிருந்து யாரால் எப்படியெல்லாம் தூவி, நீருற்றி வளர்க்கப்பட்டிருக்கின்றன என்பதுவரை உணரமுடிகிறது.
ஆனாலும் என்ன? இங்கே விமானங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குமேல் பறந்தால் அங்கங்கிருந்து "வாந்தி, தலைசுற்றல்" அலறல்கள் கேட்கத்துவங்கிவிடும்.

பத்மா,

///இவற்றிற்கெல்லாம் ஒரு முனை காரணங்கள் இல்லை. பன்முனை காரணங்கள் கொண்ட இந்த செயலூக்கு ஒருவகையில் எல்லோருமே, பெண்கள் முதல் காரணம்./////

நீங்கள் எந்தப்பெண்களைச் சொல்லுகிறீர்கள்?
காலம்காலமாகப் போற்றிவளர்க்கப்பட்ட பெண்ணடிமையை, சமூகத்தைச் சீரழிக்கும் மற்றதையெல்லாம் பற்றிய எந்தப்புரிதல்களுமற்று அல்லது புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகளே அற்று இருட்டுக்குள்ளேயே வாழ்ந்து பெண்சிசுக்களை ஒரு கிணற்றில் போட்டுவிடுகிற அறியாமை சீவன்களையா?

இல்லை

இதையெல்லாம் உணர்ந்துகொள்ளும் குறைந்தபட்சமானதோ, குறைவில்லாததோ கல்வியும், அறிவும் பெற்றபின்பும், அதைத் தனக்குக் கிடைக்கிற வாய்ப்பில் வெளிப்படுத்துவதற்கான சூழல் இருந்தும் "கோவில்களில் கருவறையில் போய் கடவுளோடு பேசுவான் ஆண், ஆனால் அப்படிப் போகமுடியாதவள் பெண்" என்கிற நியதியை இன்றுவரை கடைப்பிடிக்கும் ஒருமதம்தான் நம்முடையது எனப் பெண்களுக்கெதிரான தளங்களில் ஒன்றின்மீது விமர்சனம் வைக்கப்பட்டால் " இப்படியெல்லாம் மதத்தை எதற்குத் திட்டவேண்டும்? அதற்குப்பதிலாய் பெண்களே பூசை செய்யும் கோயில்களுக்குப் போனால் போயிற்று என்று தீர்வு சொல்லிவிட்டு பெண்சிசுக்களைக் கொல்ல அவர்களின் அம்மாக்கள், அப்பாக்கள் மட்டுமே காரணம் அவர்களைத் திருத்தினால் போதும்" எனவும் பேசிமுடித்துக்கொள்கிற பெண்களையா?

வல்லியம்மா,
பெண் என்பவள் பாவத்துக்குரிய பிறவி இல்லை என்பது எல்லா மட்டங்களிலும் உணர்ந்துகொள்ளப்படவேண்டும். அதை மறுக்கிற விசயங்கள் அனைத்தும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படவேண்டும். கேள்விக்குட்படுத்தப்படவேண்டும். பள்ளிகளில் ஆன பாடத்திட்டங்களில் இருந்து, கலைகளில் இருந்து, விழிப்புணர்வுப் பிரச்சாரங்களிலிருந்து முடிகிற ஊடகங்களில் எல்லாம் அவையெல்லாம் தொடர்ந்து நடத்தப்படவும் வேண்டும். அவைகள் சாத்தியங்கள் அற்றுப்போகிறவரை நீங்கள் சொல்வதுபோல விதைகள் பத்திரமாகவே இருக்கும்.

At 6:17 AM, August 11, 2007, Blogger பத்மா அர்விந்த் said...

இல்லை செல்வா. தன் கின்சினை கொல்ல வந்தால் சீற்றம் கொள்ளும் தாய்ப்பறவை போல் அல்லாது, இது என் விதி , என் கணவருடன் வாழ்வது மட்டுமே வாழ்கை, என்று கொல்லப்படும் நிகழ்வைகண்மூடி பார்த்து இருக்கும் பெண்களை, ஆண் வாரிசு வேண்டும் என்ற நோக்கிலேஎ பெண் குழந்தை பிறந்தால் படியேற வேண்டாம் என்ரு சொல்லி மகனையும் மருமகளைய்ம்ம்வருத்தும் மாமியாராகிய பெண்களை,
வீடும் வாழ்வும் தான் முக்கியம், வெளியேரினால் என்ன ஆகுமோ என்ரு கூட்டுக்கணக்கை போட்டுபார்த்து சமரசம் செய்துகொள்ளும் பெண்களை, சினம் கொள்ள வேண்டிய நேரத்தில் விதியின் மேல் பழியை போட்டு மொனம் காக்கும் பெண்களை சொல்கிறேன். எத்தனை நாளைக்குத்தான் எதிர்கால கணக்கு போட்டு, சமரசம் என்ற பெயரில் இவற்றை பொருத்து கொள்ளமுடியும்? கயிற்றை வீசினாலும் பிடித்து ஏற மறுத்து பிடிவாதமாய் இந்த புதைமண்ணில் ஒரு நாள் எனக்கு விடியல் வரும் என்று இருக்கும் பெண்கள் தாங்களாகவே உணராத வரை என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?இவர்கள் மட்டுமே காரணம் இல்லை. இருக்கும் காரணங்களில் இதுவும் ஒன்றுதான், அதிலும் மிக முக்கியமான காரணம்.

At 12:55 AM, August 14, 2007, Blogger செல்வநாயகி said...

பத்மா,

கருத்துப் பகிர்வுக்கு நன்றி. ஆறாத மனதுக்குத் தேறுதல்களாய்ப் பல காரணங்களையும் சொல்லிக்கொண்டிருப்பவர்கள்தான் நாம். ஆனால் உண்மையில் விடுதலை என்பது ஒவ்வொரு தனிமனித மனத்தின் தேடுதலிலும் தொடங்கவேண்டியது. அதன் பொருள் உணரமுற்படுகையில் தன்னைக் கட்டிப்போடும் அல்லது தன் கைகளில் இருந்து நீளும் கயிறுகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். அது தன் சொந்த மதத்தின் பேரிலோ, சாதியின் பேரிலோ, கல்வியின் பேரிலோ, கலாசாரத்தின் பேரிலோ எவ்வடிவில் இருந்தாலும் விட்டு விலகியிருக்க முடியும் திண்மையுள்ள மனதுக்கு. இதற்கு அக்குறிப்பிட்ட வடிவங்களை எதிர்ப்பது என்றுகூடப் பொருள்கொள்ள வேண்டியதில்லை. அவற்றிலிருந்து வெளிவருவது. அப்படி வெளிவரவியலாத மனங்களின் அலைச்சலில் வாழ்வது நம் சமூகம். பெண் குறித்தான கருத்தாக்கங்களும், மதிப்பீடுகளும் அவற்றில் ஒரு பகுதியே. நீங்கள் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். "பெண்விடுதலை" என்பதுகூட நம்மில் எல்லாபெண்களுக்கும் ஒன்றுபோல இல்லை. சாதிக்குத் தகுந்தது போல, அவரவரின் தேடுதல் எல்லைகளுக்குத் தகுந்தது போல அது வேறுவேறாய் இருக்கிறது. அவரவருக்கு வேண்டியதை அவரவர் முன்னெடுப்பர். அப்படிப்பார்த்தால் ஒரு தலித் பெண்ணுக்கான விடுதலை உங்களிடமிருந்தும், என்னிடமிருந்தும்கூட கிடைக்கவேண்டியதாய் உள்ள ஒன்று.

At 12:57 AM, August 14, 2007, Blogger செல்வநாயகி said...

At 10:04 AM, August 14, 2007, Blogger செல்வநாயகி said...

At 10:15 AM, August 14, 2007, Blogger பத்மா அர்விந்த் said...

//ஆனால் உண்மையில் விடுதலை என்பது ஒவ்வொரு தனிமனித மனத்தின் தேடுதலிலும் தொடங்கவேண்டியது. அதன் பொருள் உணரமுற்படுகையில் தன்னைக் கட்டிப்போடும் அல்லது தன் கைகளில் இருந்து நீளும் கயிறுகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும்// இதைத்தான் சொல்ல வந்தது. செல்வநாயகி, காலம் காலமாக இதுதான் சரி என்று புரிந்து கொண்டோருக்கு அதைத்தாண்டுதலும், முதல் முறையாக பறக்க வழி வரும் போது அதை நம்மால் முடியுமா என்ற பயம்வருவதும் உண்டு. உண்மையில் பெண்கள் பலரும் இந்த victim மனப்பான்மையில் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதுபோல அடிமைத்தனம் என்பது பல சங்கிலிகளால் பிணக்கப்பட்டிருக்கிறது.நான் இங்கே த்டௌதல் நிறைந்த பெண்களை பற்றி சொல்லப்வில்லை, தேடுதலின் தேவையையே கூட புரிந்து கொள்ள முடியாத/மறுக்கிற சிலரைப்பற்றியும் அவரால் தேடத் தெரிந்துகொள்கிற பெண்களின் வாய்ப்புக்களை பறிப்பதையும் பார்த்த வருத்தத்தில் எழுதுகிறேன். இதற்கு என் சமீபத்திய சிலா அனுபவங்களும் காரணம். இந்த அயற்சியும் தெளிவடையும் சீக்கிரமே.நன்றி.

Post a Comment

<< Home