நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Sunday, April 05, 2009

துளித்துளியாய்....
கோயிலில் தீர்த்தம் வாங்கிச் சிலிர்த்து நிற்கும்
மாலையணிந்த ஆடு பனித்துச் சுரக்கிறது
கண்களிலிருந்து நீரை
தேர்தலுக்கு முந்தைய மக்களை நினைத்து
**********

நெருக்கியடிக்கும் கூட்டத்தில்
நெடிதுயர்ந்த கால்களுக்கு நடுவே
தேடிநடந்துவந்து சிரித்துவிட்டுப் போகிறது
சண்டையிட்டுப் பிரிந்தவளின் குழந்தை
***********

யாரும் நடக்காத தெருவிலும்
ஒருவரும் விழிக்காத இரவிலும்
நடப்பதற்கும் பேசுவதற்கும்
என்னமோ இருக்கத்தான் செய்கின்றன
அந்த ஊதல் காற்றுக்கும்
ஊளையிடும் தெருநாய்க்கும்
**********

நகரத்தின் உயரடுக்கு மாடிகளின்
ஆறாவது தளத்தில் அன்றைய மாலையில்
பலகாரம் ருசித்தபடியே
சூடான தேநீரும் அருந்தி
அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்
பக்கத்துவீட்டின் மரணச் செய்தியை
********

யாருமற்றவனின் சன்னல் கம்பிகளில்
எச்சங்களால் எழுதிவைத்திருக்கின்றன
அங்கு வந்துபோகின்ற குருவிகள்
தமது நிறைந்த அன்பையும் நேசத்தையும்

15 Comments:

At 12:43 AM, April 06, 2009, Blogger முத்துலெட்சுமி-கயல்விழி said...

எச்சங்களால் எழுதிய நேசம் ரொம்ப நல்லா இருந்தது..

சண்டையிட்டவளின் குழந்தை ரொம்ப யதார்த்தம்..

 
At 1:23 AM, April 06, 2009, Blogger ஆ.ஞானசேகரன் said...

//நகரத்தின் உயரடுக்கு மாடிகளின்
ஆறாவது தளத்தில் அன்றைய மாலையில்
பலகாரம் ருசித்தபடியே
சூடான தேநீரும் அருந்தி
அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்
பக்கத்துவீட்டின் மரணச் செய்தியை//

இன்றய எந்திர வாழ்கையை சொல்லிவிட்டீர்கள்

 
At 6:57 AM, April 06, 2009, Blogger Raji said...

Sooper :D, nice to read your posts after a long time. Remember me? I am Raji, and we shared few expreiences about Isha Yoga program. now I am working for one of the Isha Yoga projects. Read my blog when u have time.

 
At 7:41 AM, April 06, 2009, Blogger Ravishna said...

கோயிலில் தீர்த்தம் வாங்கிச் சிலிர்த்து நிற்கும்
மாலையணிந்த ஆடு பனித்துச் சுரக்கிறது
கண்களிலிருந்து நீரை
தேர்தலுக்கு முந்தைய மக்களை நினைத்து

/* எங்கு தான் இந்த நர பலி இல்லை. இதற்க்கு ஒரு முக்கியத் துவம் இருக்கிறது செல்வி. இந்த விசயத்தில் எல்லா மதங்களும் ஒன்று சேர்ந்து நிற்கின்றன. சற்றே பெருமை படுவோம் இதிலாவது ஒன்றாய் இருக்கும் மதங்களைக்கண்டு...*/

யாரும் நடக்காத தெருவிலும்
ஒருவரும் விழிக்காத இரவிலும்
நடப்பதற்கும் பேசுவதற்கும்
என்னமோ இருக்கத்தான் செய்கின்றன
அந்த ஊதல் காற்றுக்கும்
ஊளையிடும் தெருநாய்க்கும்

/*நல்ல உவமை. மூன்று முறை படித்தேன் இந்த வரிகளை. மிகவும் பிடித்திருக்கிறது.*/

நகரத்தின் உயரடுக்கு மாடிகளின்
ஆறாவது தளத்தில் அன்றைய மாலையில்
பலகாரம் ருசித்தபடியே
சூடான தேநீரும் அருந்தி
அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்
பக்கத்துவீட்டின் மரணச் செய்தியை

/* இப்பொழுதெல்லாம் மடி வீடுக்கரர்களுக்கு கூட தொலைபேசியில் தான் பேச முடிகிறது. வளர்ந்து விட்டது நாகரிகம்*/


யாருமற்றவனின் சன்னல் கம்பிகளில்
எச்சங்களால் எழுதிவைத்திருக்கின்றன
அங்கு வந்துபோகின்ற குருவிகள்
தமது நிறைந்த அன்பையும் நேசத்தையும்

/* உங்களுடைய உவமைத் துவம் நன்ற இருக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த ஒன்று இது என்றே கூறுவேன்.*/

நன்றிகள் பல செல்வி.
வாழ்த்துக்கள் தொடருங்கள்.

 
At 9:15 AM, April 06, 2009, Blogger பதி said...

வாழ்வின் நிறங்களை துளித்துளியாய் சொல்கின்றன உங்கள் கவிதைகள்!!!

அதே சமயம்,

//நகரத்தின் உயரடுக்கு மாடிகளின்
ஆறாவது தளத்தில் அன்றைய மாலையில்
பலகாரம் ருசித்தபடியே
சூடான தேநீரும் அருந்தி
அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்
பக்கத்துவீட்டின் மரணச் செய்தியை//

இயந்திரங்களுடன் சேர்ந்து இயந்திரமாகிவிட்ட நமது வாழ்வு இன்று இப்படித்தான் உள்ளது என்னும் உண்மை உறைக்கின்றது.

 
At 9:56 AM, April 06, 2009, Blogger Thekkikattan|தெகா said...

நாயகி,

எப்படிங்க இப்படி :-) .

 
At 1:00 PM, April 06, 2009, Blogger செல்வநாயகி said...

முத்து, ஞானசேகரன், ராஜி, ரவிஷ்னா, பதி, தெக்கிக்காட்டான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ராஜி,
உங்களை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு இப்போது ஈஷாவோடெல்லாம் தொடர்பு இல்லை, ஆனாலும் யோகத்தின் மீது ஒரு மோகம் இருக்கிறது:)) உங்களின் பதிவை நிச்சயம் படிக்கிறேன்.

தெக்கிக்காட்டான்,
திட்டறீங்களா? பாராட்டறீங்களா? சரி, என்னமோ பண்ணுங்க:))

 
At 1:41 PM, May 01, 2009, Blogger சேரல் said...

//யாரும் நடக்காத தெருவிலும்
ஒருவரும் விழிக்காத இரவிலும்
நடப்பதற்கும் பேசுவதற்கும்
என்னமோ இருக்கத்தான் செய்கின்றன
அந்த ஊதல் காற்றுக்கும்
ஊளையிடும் தெருநாய்க்கும்//

//நகரத்தின் உயரடுக்கு மாடிகளின்
ஆறாவது தளத்தில் அன்றைய மாலையில்
பலகாரம் ருசித்தபடியே
சூடான தேநீரும் அருந்தி
அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்
பக்கத்துவீட்டின் மரணச் செய்தியை//

//யாருமற்றவனின் சன்னல் கம்பிகளில்
எச்சங்களால் எழுதிவைத்திருக்கின்றன
அங்கு வந்துபோகின்ற குருவிகள்
தமது நிறைந்த அன்பையும் நேசத்தையும்
//

அருமையான கவிதைகள். வாழ்த்துகளும் நன்றியும்.

-ப்ரியமுடன்
சேரல்

 
At 2:09 PM, May 01, 2009, Blogger செல்வநாயகி said...

சேரல்,
வலையுலகில் அதிகம் சுற்றவியலாத நான் உங்களைப் போன்ற நண்பர்களின் எழுத்துக்களை உங்கள் வருகை மூலமே அறிந்துகொள்கிறேன். இப்போதுதான் உங்களின் கருப்பு வெள்ளை பக்கத்தைக் கண்டுகொள்ள முடிந்தது. "தண்ணீர் தேசம்" என்ற உங்களின் பயணக்கட்டுரை என்னையும் அந்தத் தண்ணீர் தேசத்துத் தனிமையில், நெகிழ்ச்சியில் சில நிமிடங்கள் நிறுத்தி வைத்தது. நன்றி.

 
At 3:09 PM, May 01, 2009, Blogger மணிநரேன் said...

அனைத்தும் அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

 
At 3:34 PM, May 01, 2009, Blogger செல்வநாயகி said...

நன்றி மணிநரேன்.

 
At 3:50 PM, May 01, 2009, Blogger அமர பாரதி said...

செல்வநாயகி, ஒவ்வொரு கவிதையும் அழகு.

 
At 4:54 PM, May 01, 2009, Blogger செல்வநாயகி said...

நன்றி அமர பாரதி.

 
At 11:03 PM, May 14, 2009, Blogger atulugamakavi said...

மாலைக் குறிப்பு வாசித்தேன். ஆழக் கரத்துக்களைப் விதைத்துள்ளீர்கள்.

 
At 4:46 PM, May 15, 2009, Blogger செல்வநாயகி said...

உங்களை முதன்முறையாக சந்திக்கிறேன். நன்றி atulugamakavi.

 

Post a Comment

<< Home