நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, February 13, 2009

உதவ வேண்டுகிறேன்

உலகின் பல்வேறு பகுதிவாழ் தமிழர்களும் ஈழத்தின் விடியல் வேண்டி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருவது நாம் அறிந்ததே.

பொதுவாகப் பார்க்கையில் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலான நேரங்களில் ஒன்றுகூடுதல் என்பது வெறும்பொழுதுபோக்கிற்காக மட்டுமே இருக்கிறதென்பது வேதனையான உண்மை. சோடிப்பொருத்தங்கள், பாட்டுக்குப்பாட்டுகள், ரஜினி படத் திரையிடல்களில் மூழ்கிப்போகும் உள்ளங்களுக்கு நடுவே வேறு சிந்தனைகளைச் சொல்ல நினைப்பவர்கள் அந்நியப்பட்டுப்போதலே அதிகம் நடக்கிறது. அவர்கள் ஒரு ஒற்றையடிப்பாதையில் தனியே பயணிக்கத் தள்ளப்படுகிறார்கள். இதில் பாதையில் துணைசேர்ந்தாலும் பயணத்தில் முதலில் தலைவன் பதவியில் தான் உட்காரவைக்கப்படவேண்டுமெனக்கருதுகிற "எழவு வீடோ, கல்யாணவீடோ மாலை தனக்குத்தான்" என்ற மனநிலைகளைக் கடக்கமுடியாத மனிதர்கள் வேறு. நிற்க.

மிகக்குறைவானதொரு தமிழர் எண்ணிக்கையே கொண்ட எமது வசிப்பிடத்தில் ஈழம் குறித்த பார்வையில் எமது ஒற்றையடிப்பாதை சிலமுயற்சிகளுக்குப்பின் இப்போது கொஞ்சம் விரிவடைந்திருக்கிறது. நண்பர்கள் சிலர் சேர்ந்து எங்கள்பகுதி மக்கள்பிரதிநிதியை நேரில் சந்தித்து ஈழத்தில் தமிழினம் மீது நடக்கும் திட்டமிடப்பட்ட அரசாங்கத் தாக்குதல்களை ஆதாரங்களாகக் காண்பித்து தேவையான இடத்தில் அப்பிரதிநிதியைக் குரலெழுப்புமாறு கோரிக்கை வைக்கலாமென முடிவாகியிருக்கிறது.

இதுபோன்ற முயற்சிகளைத் தத்தமது பகுதிகளில் ஏற்கனவே முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிற இணையநண்பர்கள் தம் ஆலோசனைகளை வழங்கியும், புகைப்பட, வீடியோ ஆதாரங்களுக்கான இணைப்புகள் தந்தும் உதவ வேண்டுகிறேன். அதோடு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஈழத்திலோ அல்லது அகதிகளாகத் தமிழகம் வந்தவர்களுக்கோ ஏதேனுமொருவிதத்தில் பயன்படும் வகையில் நிதிஉதவிகளைச் சேர்ப்பிக்க விரும்பினால் அதற்கான வழிவகைகளையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

5 Comments:

At 3:17 PM, February 13, 2009, Blogger சயந்தன் said...

புகைப்பட, வீடியோ ஆதாரங்களுக்கான இணைப்புகள் தந்தும் உதவ வேண்டுகிறேன்//

http://blog.sajeek.com/?p=517

இதில் வன்னியில் கடமையாற்றும் மருத்துவரின் கருத்துக்கள் ஆங்கில மொழி பெயர்ப்புடன் உள்ளன.

 
At 3:23 PM, February 13, 2009, Blogger டண்டணக்கா said...

Is anyone organizing in the state of New Jersey. If so, how to take part in it?
Thanks.

 
At 4:17 PM, February 13, 2009, Blogger Muthu said...

Guys in the US, should approach FetNA to see if they can do something about it !

If ALL the Thamizh association from allover the states of the US co-ordinate with FetNA in this regard and contact the Federal Organizations, guess there'll be some impact.

Atleast, if SL is pressurised to let the international media in to find out exactly what's going on inside, that would be some sort of a victory.

Thanks
Muthu

 
At 4:59 PM, February 13, 2009, Blogger பத்மா அர்விந்த் said...

செல்வநாயகி
நியுஜெர்சியில் தமிழ்க்கலை கலாச்சார மன்றத்தில் நிதி சேகரித்து அனுப்புதல், கருவுற்ற பெண்களுக்கு மருந்துகள் அனுப்புதல் போன்றவற்றை செய்கிறார்கள். இந்த சுட்டியில் உள்ளவர்களை தொடர்பு கொண்டால் மேலும் விவரங்கள் கிடைக்கும்.
http://www.njtacs.org/index.php?page=13

 
At 9:14 PM, February 13, 2009, Blogger செல்வநாயகி said...

நன்றி நண்பர்களே.

டண்டணக்கா,
இது வடகிழக்கு விஸ்கான்சின் மாநிலத்தின் ஒரு சிறுநகரத்திலிருந்து மேற்கொள்ளப்படும் முயற்சி. நியூஜெர்ஸி பகுதியிலும் கண்டிப்பாக சிலமுயற்சிகள் நடந்துகொண்டிருக்குமென நம்புகிறேன். சென்றவாரம் வாஷிங்டன், அட்லாண்டா பகுதிகளில் பேரணிகள் நடந்திருக்கின்றன என நினைக்கிறேன்.

 

Post a Comment

<< Home